ஆயிஷா... இன்னுமொரு மலையாள வரவு!
அது என்னமோ தெரியல... மலையாளத்திலிருந்து வரும் நடிகைகள் மட்டும் எடுத்த எடுப்பிலேயே தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து வாய்ப்புகளைப் பெற்றுவிடுகிறார்கள்.
இதோ லேட்டஸ்ட் வரவு ஆயிஷா... வந்த வேகத்தில் இரு புதுப்படங்களில் நடிக்கிறார்.
நயனதாரா, நஸ்ரியா ரேஞ்சுக்கு இவர் உயர்வாரா, வளர்வாரா என்பதை போகப் போகப் பார்க்க வேண்டும்

கேரளா.. டூ பெங்களூர்.. டூ நல்ல தமிழ்
ஆயிஷா பிறந்தது கேரளா என்றாலும் வளர்ந்தது பெங்களூரில். தமிழ் நன்றாகவே பேசுகிறார்.

ஒரு நகைக் கடை விளம்பரத்தில்
ஏற்கெனவே ஒரு நகைக்கடைவிளம்பரப் படத்தில் நடித்துள்ளார்.

உனது விழியில்.. கரு
தமிழில் உனது விழியில், கரு ஆகிய இரு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

நல்ல கதை வேணுமாம்ப்பா...
"நல்ல கதைகளில் நடிக்க வேண்டும் என்ற ஆசை. சினிமாவுக்கு தேவையான அளவுக்கு நடனம் தெரியும். பாடவும் செய்வேன்.

ஸ்கைவாக் மாலில் ஆயிரம் பேருக்கு மத்தியில்
சமீபத்தில் ஸ்கைவாக் மாலில் ஆயிரம் பேருக்கு மத்தியில் பாடினேன். நல்ல வரவேற்பு கிடைத்தது. வாய்ப்பு கிடைத்தால் பாடவும் செய்வேன்," என்கிறார் ஆயிஷா.

வெப்சைட்டே போட்டாச்சு ப்ரோ...
தன்னைப் பற்றிய விவரங்களுக்கு தனி இணையதளம் ஒன்றையும் ஆரம்பித்துள்ளார்

வெப்சைட் போட்ட ஒரே நடிகை... இவருதாங்ணா..
புதுநடிகைகளில் தனக்கென தனி வெப்சைட் நடத்தும் நடிகை அநேகமாக இவராகத்தான் இருக்கும்!


Click it and Unblock the Notifications











