Don't Miss!
- News 'ஒரு பெரிய மனுஷன் பண்ற வேலையாது இது'.. கீபோர்டுல U வுக்கும் P க்கும் நடுவுல பாரு.. மீம்ஸ்
- Lifestyle Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Sports கடைசி 5 ஓவரில் 97 ரன்கள்.. ஹெலிகாப்டரை பறக்கப்பட்ட ரிஷப் பண்ட்.. பஞ்சரான குஜராத்.. கொந்தளித்த நெஹ்ரா
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தமிழ்ப்படங்களில் ’ஐயிட்டம்’ கேர்ளாக ஆடிப்பாடிய பாலிவுட் நாயகிகள்...
சென்னை: தமிழ்ப்படங்களில் நிச்சயம் ஒரு பாடலாவது குத்துப்பாடலாக அமைந்து விடுகிறது. காரணம் ரசிகர்களின் விருப்பம் எனப் படத் தயாரிப்பு தரப்பு விளக்கம் சொல்கிறது.
முன்பெல்லாம் சில குறிப்பிட்ட நடிகைகள் தான் இத்தகைய கவர்ச்சிப்பாடலுக்கு என நடனமாடுவார்கள். சில்க் ஸ்மிதா, டிஸ்கோ சாந்தி, அனுராதா என கவர்ச்சி நடனம் ஆடியே ரசிகர்களின் கனவுக்கன்னிகள் ஆன நடிகைகள் ஏராளம்.
ஆனால், கதாநாயகிகளே கவர்ச்சி நடனம் ஆட சம்மதிக்க ஆரம்பித்த காலங்களில் இத்தகைய தனிப்பட்ட நடிகைகளின் தேவை குறைந்து போனது. காலப்போக்கில் படத்தின் நாயகிகளே படம் முழுவதும் குடும்பக் குத்து விளக்காக வந்தாலும், ஒரு பாடலிலாவது கவர்ச்சி நடனம் ஆடி ரசிகர்களை திருப்தி படுத்தினர்.
இந்நிலையில், பாலிவுட் நடிகைகளை ஒரு பாட்டிலாவது ஆட வைத்து விடும் கலாச்சாரம் தற்போதைய சினிமாக்களில் பரவி வருகிறது. நாயகியின் சம்பளத்தை விட இந்தக் குறிப்பிட்ட பாடலுக்கு ஆட சம்பந்தப் பட்ட நடிகைகள் பெறும் சம்பளம் அதிகம்.
இதனால், தமிழ்ப்படங்களில் ஒருபாடலுக்கு ஆட பாலிவுட் நடிகைகளும் அதிக ஆர்வம் காட்டுகிறார்களாம். அவ்வாறு சமீபத்திய தமிழ் படங்களில் குத்தாட்டம் போட்ட பாலிவுட் நடிகைகள் தான் இவர்கள்....
சிரிப்பு என் ஸ்பெஷாலிட்டி....
சூர்யாவின் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி வரும் அஞ்சான் படத்தில் ஒருபாடலுக்கு நடனமாடுகிறார் சித்ரங்கடா சிங். ‘சிரிப்பு என் ஸ்பெஷாலிட்டி...' எனத் தொடங்கும் அப்பாடலுக்கு நடனமாட அவருக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
லோ ஆன லைஃப்....
பிரபல நீலப்பட நடிகையாக அறியப்பட்ட சன்னி லியோன், தற்போது இந்திப்படங்களில் நாயகியாக வலம் வருகிறார். இவர், தமிழில் ஜெய்-சுவாதி நடிப்பில் உருவாகும் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட இருக்கிறாராம். ‘லோ ஆன லைஃப்' என்ற பாடலுக்கு வெள்ளை உடையில் தேவதையாக கனவுப் பாடல் பாடுகிறாராம் சன்னி. ஜெய்யின் கன்னத்தில் சன்னி லியோன் முத்தமிடுவது போன்ற போட்டோ தான் கோலிவுட்டின் ஹாட் இப்போ...
மல்கோவா...
நகுலின் ‘நான் ராஜாவாகப் போகிறேன்' படத்தில் ‘மல்கோவா' பாடலுக்கு நடனமாடிய ஜரீனா கானும் பாலிவுட் நடிகை தான்.
தீயே.. தீயே...
சூர்யாவின் மாற்றான் படத்தின் ‘தீயே.. தீயே...' பாடலுக்கு தீயாய் ஆடியவர் தான் இஷா ஷெர்வானி. இப்பாடலில் இஷாவுடன் சூர்யா மற்றும் காஜல் அகர்வால் ஆகியோரும் நடனமாடியிருப்பார்கள்.
கலசலா....
ஜாக்கிசான் உடன் நடித்தவர் எனக் கொண்டாடப் பெற்றவர் பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத். கமலின் தசாவதாரம் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மல்லிகா. அதேபோல், சல்மான் கானின் தபாங் படத்தை ரீமேக்கான சிம்புவின் ஒஸ்தியிலும் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார்.
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க