சாமியார் தோற்றத்தில் தமன்னா.. திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன? ஷாக்கான ரசிகர்கள்!

சென்னை : சாமியார் தோற்றத்தில் இருக்கும் நடிகை தமன்னாவைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.

திரை உலகில் டாப் நடிகைகளில் ஒருவரான நடிகை தமன்னா, தமிழ், தெலுங்கு, ஹிந்தி,கன்னடம், மராத்தி என அனைத்து ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்தமானவர்.

விஜய், அஜித், தனுஷ், சூர்யா, விஷால், கார்த்தி, பிரபாஸ்,ஜூனியர் என்டிஆர், மகேஷ்பாபு என ஏராளமான ஸ்டார் நடிகர்களுடன் நடித்துள்ளார்.

நடிகை தமன்னா

நடிகை தமன்னா

அழகு பொம்மை போல வந்து செல்லும் கதாநாயகிகளுக்கு மத்தியில், கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் தமன்னா. பாகுபலி படத்தில் பிரபாஸூடன் போட்டி போட்டுக்கொண்டு சண்டை காட்சியில் மிரட்டிய இவர், விஷாலுடன் ஆக்ஷன் படத்தில் அதிரடி காட்டினார்.

அடுத்தடுத்த படத்தில்

அடுத்தடுத்த படத்தில்

அந்த படத்திற்கு பிறகு வித்தியாசமான கதை அம்சத்தைக் கொண்ட நவம்பர் ஸ்டோரி வெப்சீரிஸ் துணிச்சலான பெண்ணாக நடித்திருந்தார். அந்த வெப் சீரிஸ் அவருக்கு நல்ல கம்பேக் கொடுத்தது. தற்போது இவர் போலா சங்கர் என்ற தெலுங்கு படத்திலும், போலே சூடியன் என்ற இந்தி படத்திலும், பாந்த்ரா என்ற இந்தி படத்திலும் நடித்து வருகிறார்.

ஜெயிலரில்

ஜெயிலரில்

தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் 70சதவீத படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் தற்போது படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ராஜஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ரஜினி விமானத்தின் மூலம் ராஜஸ்தான் சென்றுள்ளார்.தமிழ்,தெலுங்கு, இந்தி, மலையாளம்,கன்னடம் என 5 மொழிகளில் பான் இந்திய படமாக தயாராகி வருகிறது.

லிங்கபைரவி கோவில்

லிங்கபைரவி கோவில்

ஏராளமான படங்களை கையில் வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து வரும் தமன்னா, சாமியார் தோற்றத்தில் இருக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ஈஷாவில் உள்ள லிங்கபைரவி கோவிலுக்குள் நுழையும் போது ஒருவிதமான அருளை என்னால் உணர முடிந்தது.

ஷாக்கான ரசிகர்கள்

ஷாக்கான ரசிகர்கள்

வாழ்க்கை குறித்த பயம், மரணம், ஏழ்மை மற்றும் தோல்வி குறித்து வருத்தம் என அனைத்தையும் மாற்றிவிடும். இதை நான் உறுதியாக நம்புவதால், லிங்கபைரவி யந்திரத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்ல நினைத்தேன், இதற்காக ஈஷோ யோகா மையம் ஒரு வழிகாட்டி உள்ளது. அவர்கள் வழிபாடு செய்து லிங்கபைரவி சிலை வீட்டுக்கு தருகிறார்கள் என்றார். எதுவாக இருந்தாலும் காவி உடை,நெற்றியில் குங்குமம், கழுத்தில் சாமிக்கயிறுடன் இருந்த தமன்னாவைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X