குழந்தை பிறப்பு விவரிக்க முடியாத உணர்வு… காஜல் அகர்வால் நெகிழ்ச்சி பதிவு !

சென்னை : நடிகை காஜல் அகர்வால், குழந்தை பிறப்பு குறித்து நெகிழ்ச்சியாக ஒரு பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Recommended Video

Kajal Aggarwalக்கு ஆண் குழந்தை | மகனுக்கு என்ன பெயர் வைச்சிருக்காங்க தெரியுமா?

தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நாயகியாக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். இவர் கடந்த 2008 ம் ஆண்டு பரத்தின் பழனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது அறிமுகத்தை கொடுத்தார்.

இதையடுத்து, எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவான மகதீரா படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத்தந்ததுடன் வசூலில் சாதனை படைத்தது.

முன்னணி நடிகை

முன்னணி நடிகை

தமிழில் விஜயின் துப்பாக்கி, ஜில்லா படங்களில் நடத்த காஜல் அகர்வால் முன்னணி நடிகை என பெயர் எடுத்தார். போலீஸ் உமனாகவும், ஸ்போர்ட்ஸ் கேர்ளாகவும் இவர் நடித்த படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன. அஜித், சூர்யா, தனுஷ் போன்றவர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

ஆண் குழந்தை

ஆண் குழந்தை

படங்களில் பிஸியாக வலம் வந்து கொண்டிருந்த காஜல் கடந்த 2020ஆம் ஆண்டு கவுதம் கிச்சலு என்பவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பிறகு அவ்வப்போது கணவருடன் இருக்கும் ரொமாண்டிக் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். காஜல் அகர்வால் கிச்லு தம்பதிக்கு இறைவனின் ஆசிர்வாதத்துடன் ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு நீல் என பெயர் வைத்துள்ளனர்.

விவரிக்க முடியாத உணர்வு

விவரிக்க முடியாத உணர்வு

இந்நிலையில், நடிகை காஜல் அகர்வால், குழந்தை பிறப்பு குறித்து நெகிழ்ச்சியாக ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில், என் குழந்தை நீலை இந்த உலகத்திற்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நீல் பிறந்த அந்த சில நொடி என் மார்பில் அவன் பிடித்துக் கொண்டது, விவரிக்க முடியாத உணர்வு. அந்த ஒரு கணத்தில் எனக்கு அன்பின் ஆழமான திறனைப் புரிய வைத்தது, மிகப்பெரிய அளவிலான நன்றியுணர்வை உணர வைத்தது.

அழகாக உணர்கிறேன்

அழகாக உணர்கிறேன்

குழந்தை பிறப்பு நிச்சயமாக எளிதான காரணம் அல்ல. உண்மையில், பிரசவத்திற்குப் பிறகு கவர்ச்சியாக இல்லை, ஆனால் நிச்சயமாக அழகாக உணர்கிறேன் என்று குழந்தை பிறப்பு குறித்து நடிகை காஜல் நெகிழ்ந்து பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X