நடிகை ஜெனிலியாவுக்கு ஆண் குழந்தை
பிரபல நடிகை ஜெனிலியாவுக்கு மும்பையில் நேற்று ஆண் குழந்தை பிறந்தது.
பாய்ஸ் படத்தில் இயக்குநர் ஷங்கரால் அறிமுகம் செய்யப்பட்டவர் ஜெனிலியா. தொடர்ந்து சச்சின், வேலாயுதம், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன் ஏராளமான படங்களில் நடித்தார். தெலுங்கிலும் முன்னணி நாயகியாகத் திகழ்ந்தார்.

அவருக்கும், மராட்டிய மாநில முன்னாள் முதல்-மந்திரி விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகனும், நடிகருமான ரிதேஷ் தேஷ்முக்குக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த ஆண்டு ஜெனிலியா கர்ப்பம் அடைந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்தது. இத்தகவலை ரிதேஷ் தேஷ்முக் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஜெனிலியாவும், ரிதேஷும் ‘துஜே மேரி கசம்' படம் மூலமாக இந்தியில் அறிமுகம் ஆனார்கள். அப்போது அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. தொடர்ந்து நான்கு இந்திப் படங்களில் ஜோடியாக நடித்த பின், பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications











