ரைசிங் ஸ்டார் விருது.. சந்தோஷத்தில் திவ்யபாரதி.. எல்லாமே பேச்சுலர் படம் செய்த மாயம்!

சென்னை: எடிசன் விருது விழாவில் நடிகை திவ்யபாரதிக்கு ரைசிங் ஸ்டார் விருது வழங்கப்பட்டது.

ஜிவி பிரகாஷ் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் 3ம் தேதி வெளியான பேச்சுலர் திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இயக்குநர் சதீஷ் செல்வகுமார் பேச்சுலர் படத்தில் ஜிவி பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக திவ்யபாரதியை அறிமுகம் செய்திருந்தார்.

இளைஞர்களை ஈர்த்த பேச்சுலர்

இளைஞர்களை ஈர்த்த பேச்சுலர்

ஆண்டுக்கு அரை டஜன் படங்களை ரிலீஸ் செய்து வருகிறார் ஜிவி பிரகாஷ். ஒரு பக்கம் இசையமைப்பாளராக மாஸ் காட்டி வரும் ஜிவி பிரகாஷ். இன்னொரு பக்கம் நடிகராகவும் பல படங்களில் நடித்துத் தள்ளி வருகிறார். அதில், ஒரு சில படங்கள் ஜிவி பிரகாஷுக்கு நல்லாவே க்ளிக் ஆகின்றன. அப்படி கடந்த ஆண்டு க்ளிக்கான படம் தான் பேச்சுலர்.

திவ்யபாரதி அறிமுகம்

திவ்யபாரதி அறிமுகம்

இன்ஸ்டாகிராமில் ஹாட் போட்டோக்களை போட்டு லைக்குகளை அள்ளி வந்த திவ்யபாரதிக்கு ஜாக்பாட் அடித்தது போல பேச்சுலர் படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வெறும் கிளாமர் ஹீரோயினாக மட்டுமின்றி நடிப்பதற்கு படம் முழுக்க இருந்த ஸ்கோப்பை பயன்படுத்திக் கொண்டு முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்திருந்தார் திவ்யபாரதி.

எடிசன் விருது

எடிசன் விருது

சென்னையில் சமீபத்தில் நடந்த எடிசன் விருது விழாவில் நடிகர் சிம்புவுக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. மாநாடு படத்தை இயக்கிய இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு இரண்டு விருதுகள் கிடைத்தன. ஹரிஷ் கல்யாணுக்கு சிறந்த நெகட்டிவ் ரோல் விருது கசடதபற படத்திற்காக கிடைத்தது. ரைசிங் ஸ்டார் விருதை நடிகை திவ்யபாரதி தட்டிச் சென்றார்.

செம ஹேப்பி

செம ஹேப்பி

எடிசன் விருது விழா 2022ல் Rising Star Female விருது நடிகை திவ்யபாரதிக்கு வழங்கப்பட்ட நிலையில், அந்த விருதை கையில் ஏந்தியபடி அவர் கொடுத்துள்ள அட்டகாசமான போஸ் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன. விருது கிடைத்தது ரொம்ப சந்தோஷத்தை கொடுப்பதாகவும், எடிசன் விருது விழா குழுவுக்கும் தனது ரசிகர்களுக்கும் நன்றியை கூறியுள்ளார்.

விருது சிலை

விருது சிலை

கருப்பு நிற கவர்ச்சி உடையில் அப்படியே விருது சிலை போலவே அழகாக எடிசன் விருது விழாவில் கலந்து கொண்ட நடிகை திவ்யபாரதியை ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர். மேலும், இதே போல ஏகப்பட்ட விருதுகளை வெல்ல வேண்டும் என்றும் திவ்யபாரதியை வாழ்த்தி வருகின்றனர். முகேன் ராவுடன் இணைந்து அடுத்ததாக மதில்மேல் காதல் புராஜெக்டில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X