டிரான்ஸ்பரண்ட் சேலை.. அட்டகாசமாக போஸ் கொடுத்து கிக் ஏற்றும் திவ்யா பாரதி!
சென்னை: மாடல் அழகியான திவ்யா பாரதி 1992ம் ஆண்டு கோயம்புத்தூரில் பிறந்தவர். கல்லூரியில் படிக்கும் போதே நடிப்பின் மீது ஆர்வம் இருந்ததால், மாடலிங்கில் கலக்கி வந்த இவர் முதல் படத்திலேயே தமிழ் ஆடியன்சின் மனதை வென்றுவிட்டார். தற்போது இவர் பகிர்ந்துள்ள போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
மாடல் அழகியும், திரைப்பட நடிகையுமான நடிகை திவ்யா பாரதி கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்த பேச்சிலர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இயக்குநர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் திரைக்கு வந்த பேச்சுலர் படத்தில் ஜிவி பிரகாஷுடன் ஜோடி போட்டு நடித்திருந்தார்.

நடிகை திவ்யா பாரதி: லிவ் டூ கெதர் உறவு முறை குறித்து உருவான பேச்சுலர் படத்தில், திவ்யா பாரதி சுப்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் கசமுசா காட்சிகள், படுக்கை அறை காட்சிகள், லிப் லாக் சீன் என படம் இளசுகளை குஷிப்படுத்தும் வகையில், படம் ராவாகத்தான் இருந்தது. திவ்யா பாரதிக்கு இது முதல் படமாக இருந்தாலும், தனது கதாபாத்திரத்தை உணர்ந்து கனகச்சிதமாக நடித்ததாலும், தாராளமாக கவர்ச்சி காட்டியதாலும் இவர் தமிழ் நாட்டின் கனவு கன்னியாகவே மாறிவிட்டார்.

அந்த படத்தை தொடர்ந்து, அம்மணியின் கையில் சுமார் அரைடஜன் படங்கள் உள்ளன. பிக்பாஸ் டைட்டில் வின்னர் முகேன் ராவுக்கு ஜோடியாக மதில் மேல் காதல், இயக்குனர் சேரன் இயக்கும் வெப் சீரிஸ், நடிகர் கதிருக்கு ஜோடியாக இஷ்க் படத்தின் தமிழ் ரீமேக் என இவரின் பட பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இவர் நடித்த சில படங்களின் பணிகள் முழுமையாக நிறைவடைந்துவிட்ட நிலையில், விரைவில் ரிலீஸ் ஆகவும் உள்ளது.என்ன தான் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துக்கொண்டு இருந்தாலும், தன்னை பின் தொடரும் ரசிகர்களுக்கு அடிக்கடி கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார்.

இணையத்தில் படுஆக்டிவ்: சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் திவ்யா பாரதிஅவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதனால் இவரை பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நடிகை திவ்யா பாரதியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மூன்று புள்ளி நான்கு மில்லியன் பாலோவர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். தற்போது, நீல நிற டிரான்ஸ்பரண்ட் சேலையில் அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோவிற்கு இணையத்தில் லைக்குகள் குவிந்து வருகிறது.

சர்ச்சையில் சிக்கினார்: அண்மையில், கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் திவ்ய பாரதி, சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள சென்ற போதுகூட, அரைகுறை ஆடையுடன் படு கவர்ச்சியாக வந்து சர்ச்சையில் சிக்கினார். இதனை தொடர்ந்து கல்லூரி போன்ற இடத்துக்கு செல்லும் போது, நாகரீகமான ஆடை அணிந்து செல்வதுதான் நல்லது என் சமூக ஆர்வலர்கள் பலர் அவருக்கு அறிவுரை கூறினார்கள் என்பது குறிப்பிடத்தககது.


Click it and Unblock the Notifications











