Bad Girl Actress: எவ்ளோ பெரிய பீர் கிளாஸ்.. நடிகை அஞ்சலி சிவராமன் கொஞ்சம் பேட் கேர்ள் தான் போலயே!

சென்னை: இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் இயக்குநர் அனுராக் காய்ஷாப் தயாரிப்பில் உருவான படம் பேட் கேர்ள். இந்த படத்தை வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய வர்ஷா பரத் இயக்கியுள்ளார். படத்தின் டீசர் வெளியானதில் இருந்தே இந்த படம் குறித்த சர்ச்சைகளும் படத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் இருந்து வருகிறது. இந்த வாரத்தில் கூட உயர்நீதிமன்ற மதுரை கிளை, படத்தின் டீசரை இணையத்தில் இருந்து நீக்கச் சொன்னது. இந்நிலையில் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை அஞ்சலி சிவராமன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் பலருக்கும் கொஞ்சம் ஷாக் கொடுத்துள்ளது.

பேட் கேர்ள் திரைப்படம் இந்தியாவில் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் படம் வெளிநாடுகளில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வருகிறது. ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் NETPAC விருதை வென்று, தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்துள்ளது, ஆனால் இந்த படத்தின் டீசரை ஏன் நீதிமன்றம் நீக்கச் சொன்னது என்றால், டீசரில் சிறுவர்-சிறுமிகள் தொடர்பான ஆபாச காட்சிகள் இருப்பதாக கூறி அந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது.

Bad Girl Movie Actress Anjali Sivaraman Drinks beer On Big Jaar With Her Female Friend Photos Goes Trending
Photo Credit:

ரிலீஸ் எப்போது? : படத்தின் ரிலீஸ் தேதி டீசர் மீது ஏற்பட்ட சர்ச்சைகளால் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. ஆனாலும் படம் வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்படுகிறது. செப்டம்பர் 5ஆம் தேதி சிவகார்த்திகேயனின் மதாராஸி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை அஞ்சலி சிவராமன் தனது தோழியுடன் இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளார்.

பீர்: அங்கு அவர் தனது தோழியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் அவரும் அவரது தோழியும் பீர் சாப்பிடும் புகைப்படம் குறித்த விவாதம் ரசிகர்கள் மத்தியில் தொடங்கிவிட்டது.

Bad Girl Movie Actress Anjali Sivaraman Drinks beer On Big Jaar With Her Female Friend Photos Goes Trending
Photo Credit:

கொஞ்சம் பேட் கேர்ள்: நடிகை அஞ்சலி சிவராமனும் அவரது தோழியும், பெரிய ஜக் ஒன்றில் பீர் அருந்துகிறார்கள். அந்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் சிலர், பேட் கேர்ள் படத்தின் நடிகை அஞ்சலி சிவராமன், உண்மையாலுமே கொஞ்சம் பேட் கேர்ள் தான் போல எனக் கூறி வருகிறார்கள். அதேபோல் அவரும் அவரது தோழியும் கண்ணாடி முன்னால் நின்று கொண்டு, தங்களது கைகளை மடக்கி, தங்களை வலிமையானவர்கள் எனக் காட்டும் படியும் போஸ் கொடுத்துள்ளனர். அதேபோல் கடற்கரையும் செம ஜாலியாக இருந்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்கள். இவை ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X