பார்த்து எவ்ளோ நாளாச்சு.. பூலான்தேவியை மறக்க முடியுமா? சின்னத்திரைக்கு மீண்டும் வருகிறார் சீமா

By

சென்னை: பூலான் தேவியாக கலக்கிய நடிகை, இப்போது சின்னத்திரை தொடரில் மீண்டும் நடிக்க இருக்கிறார்.

பூலான் தேவியின் வாழ்க்கைக் கதையை மையமாக கொண்டு, பண்டிட் குயின் என்ற படத்தை 1994 ஆம் ஆண்டு இயக்கி இருந்தார், சேகர் கபூர்.

இந்தப் படம் பிரபலமான, கான் ஃபிலிம் பெஸ்டிவல் உட்பட பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்றது.

தேசிய விருது

தேசிய விருது

இதில், பூலான் தேவியாக நடித்து அசத்தி இருந்தவர், சீமா பிஸ்வாஸ். இதில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் அவர் பெற்றிருந்தார்.

இயற்கை

இயற்கை

ஏராளமான இந்தி, மலையாள படங்களில் நடித்துள்ள இவர், தமிழில் ஜனநாதன் இயக்கத்தில் தேசிய விருது பெற்ற இயற்கை, சரத்குமாரின் தலைமகன் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

சின்னத்திரை

சின்னத்திரை

அழுத்தமான கேரக்டர்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் அவர், கடந்த சில வருடங்களாக அதிகமாக நடிக்கவில்லை. சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்த அவர், அதில் நடிப்பதையும் நிறுத்தி இருந்தார்.

சினிமா வாய்ப்பு

சினிமா வாய்ப்பு

இந்நிலையில் அவர் இந்தி சின்னத்திரை தொடரில் மீண்டும் நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது, சின்னத்திரை தொடரில் நடிக்கும்போது, காலையில் இருந்து மாலை வரை, ஸ்பாட்டிலேயே இருக்க வேண்டும். இதனால் சினிமாவில் நடிக்க முடியாமல் போய்விடும்.

சூரஜ் பரஜத்யா

சூரஜ் பரஜத்யா

இதனால் கடந்த 5 வருடமாக தொடர்களில் நடிக்கவில்லை. இயக்குனர் சூரஜ் பரஜத்யா இப்போது என்னைக் கேட்டுக்கொண்டதால், அவரது தாதி அம்மா தாதி அம்மா மான் ஜோ என்ற தொடரில் நடிக்கிறேன். இதில் ஜாலியான பாட்டியாக வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X