twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இதனால் தெரிவிக்கப்படுவது என்னவெனில் 'தாமிரபரணி' பானு இனி முக்தாபானு என்றே அழைக்கப்படுவார்!

    |

    சென்னை: தாமிரபரணி பானு இனி தன் பெயரை முக்தாபானு என்று மாற்றிக் கொள்ளப் போகிறாராம்.

    திறமையோடு, அதிர்ஷ்டமும் வேண்டும் ஜொலிக்க , என்ற நம்பிக்கையில் தான் நம்மில் பலர் பெயரை மாற்றிக் கொள்கிறார்கள். நடிகைகளும் இதற்கு விதிவிலக்கல்ல...

    தாமிரபரணி படத்தில் அறிமுகமானவர்தான் இந்த பானு. அதன் பிறகு பெரிய அளவில் தமிழில் பிரகாசிக்கவில்லை. இந்த நிலையில் தனது பெயரில் திருத்தம் செய்துள்ளார் பானு.

    இப்படி பெயர் மாறிய சில ஹீரோயின்கள் குறித்து ஒரு ரவுண்டு பார்ப்போமா...

    சங்கீதா 'ராசி'யானார்...!

    சங்கீதா 'ராசி'யானார்...!

    டபுள்ஸ் நாயகி சங்கீதா பிதாமகனில் ராசி என பெயர் மாற்றம் செய்து பேசப்படும் அளவுக்கு பிரபலமானார்.

    ’ர’ போய் ’தி’ வந்தது...

    ’ர’ போய் ’தி’ வந்தது...

    'குத்து' ரம்யா , திவ்யாவான பிறகு தான் சூர்யாவுடன் ஜோடி போட்டார். விருதுகளும் வாங்கினார்.

    விஷாலின் முறைப்பெண்...

    விஷாலின் முறைப்பெண்...

    தாமிர பரணியில் விஷாலுடன் குத்தாட்டம் ஆடியும், ராசியில்லாத நடிகை என்ற குத்து தான் திரைவட்டத்தில் பானுவுக்கு கிடைத்தது.

    சேச்சியாகும் பானு...

    சேச்சியாகும் பானு...

    தாமிரபரணி பானு, தற்போது நடித்து வரும் ஒரு படத்தில், நாகர்கோவில் தமிழ் பேசி நடித்துள்ளாராம்."என் தாய்மொழி மலையாளம் என்பதால், அந்த ஊர் தமிழை பேச, எனக்கு சிரமமாக தெரியவில்லை. சில நாட்களிலேயே பேச கற்றுக் கொண்டு, இயல்பான நடிப்பை வெளிப்படுத்தினேன் என்கிறார் பானு. பேஷ் பேஷ் சேச்சி

    இனிமேல் முக்தா பானு

    இனிமேல் முக்தா பானு

    இந்த படத்திலிருந்து, தன் பெயரையும் முக்தா பானு என்று மாற்றியுள்ளார். அவருடைய உண்மையான பெயர் ‘முக்தா எல்சா ஜார்ஜ்'. டைரக்டர் ஹரி, பானு என்ற பெயரில் அறிமுகப்படுத்தினார்.

    அதை வெட்டி இதை தூக்கி அத்தோடு சேர்த்து...

    அதை வெட்டி இதை தூக்கி அத்தோடு சேர்த்து...

    தன் முழுப் பெயரிலிருந்து, 'முக்தா'வை மட்டும் எடுத்து, தாமிரபரணியை கட் செய்து விட்டு, முன்னால் சேர்த்துக் கொள்ளப் போகிறாராம் பானு. எல்லாம்

    ஒரிஜினல் பெயர் தெரியுமா...

    ஒரிஜினல் பெயர் தெரியுமா...

    சரி பானுவின் ஒரிஜினல் முழுப் பெயர் என்ன தெரியுமா.. முக்தா எலீசா ஜார்ஜ் என்பதாம். கேட்கவே ஆச்சரியமா இருக்குல்ல.. எம்பூட்டு ஏமாத்துராங்கப்பா இந்த சினிமாக்காரங்க.

    பானு... முக்தாபானுவாக என்ன காரணம்...

    பானு... முக்தாபானுவாக என்ன காரணம்...

    "எதற்காக இந்த பெயர் மாற்றம் என்று கேட்டால், "பானு என்ற பெயர் "தாமிரபரணிக்கு பின், எனக்கு ஒர்க் அவுட் ஆகவில்லை. அதனால், இனி நடிக்கும் படங்களில் பெயர் மாற்றம் செய்தால், ஒரு மாற்றம் கிடைக்கும் என்று, என் குடும்ப ஜோதிடர் கூறியதால், முக்தாவை என் பெயருடன் இணைத்துள்ளேன் என்கிறார் பானு.

    வெயிட் அண்ட் சி...

    வெயிட் அண்ட் சி...

    பானுவுக்கு பெயர் மாற்றம் கை கொடுக்குமா? பொறுத்திருந்துதான் பார்ப்போமே, என்ன அவசரம்...

    English summary
    Muktha Elsa George, known mononymously as Muktha or by her stage name Bhanu, is an Indian film actress. She has acted in a number of Malayalam, Tamil and Telugu language films. Now, Banu has decides to add 'Muktha' in front of banu.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X