ஹீரோயின்
பானுப்பிரியா விரைவில் அம்மாவாகப் போகிறார்.
"மெல்லப் பேசுங்கள்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் பானுப்பிரியா. அதன் பிறகு ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கமல், ரஜினிஆகியோருடனும் பானுப்பிரியா நடித்துள்ளார்.
பின்னர் தெலுங்குப் பக்கமாக ஒதுங்கி காணாமல் போனார். அவரை மீண்டும் தமிழுக்குக் கொண்டு வந்தார் பாக்கியராஜ். இரண்டாவது ரவுண்டில்முன்னணிக்கு வந்தார்.
மீண்டும் பட வாய்ப்புகள் குறைந்ததால் பானுப்பிரியா சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவைச் சேர்ந்தவரை கைப்பிடித்தார். கல்யாணத்திற்குப் பிறகு சில காலம்நடிக்காமல் இருந்தார்.
கணவருடன் சிறிய பிரச்சனையும் ஏற்பட்டது. பின்னர் உறவு சீரானது.
இந்த நிலையில் டிவி சீரியல்களில் நடிக்க ஆரம்பித்த பானுப்பிரியா தற்போது மீண்டும் படங்களிலும் நடிக்கத் தொடங்கியுள்ளார். சிறந்த பரதநாட்டிய கலைஞருமானபானுப்பிரியா, ஜெயா டிவியில் இந்தக் கலை தொடர்பான ஒரு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
பானுப்பிரியா தற்போது கர்ப்பமாக உள்ளாராம். இந்தச் செய்தியைக் கேட்டு சந்தோஷமடைந்த அவரது கணவர் வீட்டார் உடனடியாக அவரைஅமெரிக்கா வரக் கூறினார்களாம்.
ஆனால் கையில் இருக்கும் பணிகளை விரைவாக முடித்து விட்டு தான் அமெரிக்காவுக்க பறக்க பானு திட்டமிட்டுள்ளாராம்.


Click it and Unblock the Notifications











