மீண்டும் நடிப்பில் தீவிரம் காட்டும் குட்டி ராதிகா- பானுப்ரியா!

By Shankar

மீண்டும் சினிமாவில் நடிப்பதில் மும்முரம் காட்டுகின்றனர் நடிகை பானுப்ரியா மற்றும் ஏகப்பட்ட கிசுகிசுக்களில் சிக்கிய குட்டி ராதிகா ஆகியோர்.

பானுப்ரியா தொன்னூறுகளில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்தவர். ரஜினி, கமல் உள்பட பலருடனும் நடித்துவிட்டார். தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்தார்.

சீரியல்கள்

சீரியல்கள்

100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவர், வாய்ப்புகள் குறைந்ததும் ஏவிஎம் தயாரித்த சீரியல்களின் நிரந்தர கதாநாயகியாகிவிட்டார்.

பின்னர் ஆதர்ஷ் கவுஷால் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் நடிப்புக்கு முழுக்குப் போடவில்லை. அவ்வப்போது நடித்துக் கொண்டிருந்தார். ஆஹா என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.

தனுஷ் படங்களில்

தனுஷ் படங்களில்

திருமண வாழ்க்கை கசந்து, கணவரை விவாகரத்து செய்துவிட்டு சென்னையிலேயே செட்டிலாகிவிட்ட பானுப்ரியா, பொல்லாதவன், 3 ஆகிய படங்களில் தனுஷுடன் நடித்தார்.

மீண்டும்

மீண்டும்

இப்போது அவதாரம், சத்ரபதி உள்பட சில தெலுங்குப் படங்களிலும், ஒரு கன்னடப் படத்திலும் நடிக்கிறார். தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளதாகக் கூறியுள்ளார்.

குட்டி ராதிகா

குட்டி ராதிகா

தமிழில் இயற்கை படம் மூலம் அறிமுகான குட்டி ராதிகா, 14 வயதிலேயே திருமணமானவர். 2000-ல் ரத்தன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஏகப்பட்ட பிரச்சினைகள். தொடர்ந்து 2002-ல் ரத்தன் மாரடைப்பால் மரணமடைந்தார்.

2006-ம் ஆண்டு திடீரென காணாமல் போனார். அவர் திரும்பி வந்தபோது கையில் ஒரு குழந்தை இருந்தது.

குமாரசாமி

குமாரசாமி

இவருக்கும் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கும் தொடர்பு இருந்ததாகவும், அவருக்குப் பிறந்த குழந்தைதான் அது என்றும் செய்திகள் வெளியாகின. பின்னர் குட்டி ராதிகாவை தான் திருமணம் செய்து கொண்டதாக குமாரசாமி கூறினார். ராதிகாவுக்காகவே ஒரு தொலைக்காட்சி சேனல் கூட தொடங்கினார்.

மீண்டும் நடிப்பு

மீண்டும் நடிப்பு

இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார் குட்டி ராதிகா. கன்னடப் படங்களை வாங்கி வெளியிட்டும், படங்கள் தயாரித்தும் வருகிறார்.

பானுப்ரியாவுடன்

பானுப்ரியாவுடன்

இவரும் பானுப்பிரியாவும் இணைந்து நடிக்கும் படம்தான் அவதாரம் என்ற தெலுங்குப் படம்! இதில் பானுப்ரியா அம்மனாகவும் ராதிகா பக்தையாகவும் நடிக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X