Kanaka - முதலமைச்சர் ஆசை.. கனகாவை ரகசிய திருமணம் செய்தார் என்.டி.ஆர்.. குண்டை தூக்கிப்போட்ட பயில்வான்

சென்னை: Kanaka (கனகா) நடிகை கனகாவை என்.டி.ராமாராவ் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கிறார்.

பழம்பெரும் நடிகையான தேவிகாவின் மகள் கனகா. அவர் கங்கை அமரன் இயக்கிய கரகாட்டக்காரன் படத்தின் மூலம் அறிமுகமானார். ராமராஜன் ஹீரோவாக நடித்த அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. மேலும் கனகாவின் அழகும் நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர தமிழ் சினிமாவில் முதல் படத்திலிருந்தே முன்னணி ஹீரோயினாகிவிட்டார் அவர்.

Bayilvan Ranganathan has said that NT Rama Rao secretly married actress Kanaka

முன்னணி ஹீரோயின்: அதன்படி ரஜினியுடன் அதிசய பிறவி,அதிசய பிறவி, தங்கமான ராசா, பெரிய இடத்து பிள்ளை,துர்கா, எங்க ஊரு ஆட்டுக்காரன், அம்மன் கோயில் திருவிழா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் ஹீரோயினாக நடித்தார்.

தனிமைப்படுத்திக்கொண்ட கனகா: அவரது கிராஃப் உச்சத்தில் சென்றுகொண்டிருந்தபோது அவரது தாய் தேவிகா உயிரிழக்க ரொம்பவே மன உளைச்சலுக்கு ஆளானார் கனகா. அதுமட்டுமின்றி அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் இன்னொரு பிரச்னையும் நடந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திகொண்டார்.

குட்டி பத்மினி: தனிமைப்படுத்திக்கொண்ட கனகா பல வருடங்களாக சினிமாவை சேர்ந்த யாரையும் சந்திக்காமல் இருந்தார். அவர் குறித்து பலரும் பேட்டி அளித்து வந்தாலும் கனகா மட்டும் வெளியே வராமல் இருந்தார். இந்த சூழலில் நடிகை குட்டி பத்மினி சமீபத்தில் கனகாவை சந்தித்தார். அப்போது கனகாவும் அவர் முத்தம் கொடுக்கும்படியான புகைப்படத்தையும் வெளியிட்டார். புகைப்படத்தை பார்த்த பலரும் கனகாவை கண்டு சந்தோஷம் அடைந்தனர்.

பயில்வான் ரங்கநாதன் பேட்டி: கனகாவை சந்தித்த குட்டி பத்மினி அவரிடம், வெளிநாடு செல்ல அறிவுறுத்தியதாகவும் பேட்டி ஒன்று கொடுக்க சொன்னதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கனகா குறித்து பயில்வான் ரங்கநாதன் அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் பேசியிருக்கும் வீடியோவில், "கனகாவின் அம்மா தேவிகா என்.டி.ராமாராவ்வுடன் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்

முதலமைச்சர் ஆசை: என்.டி.ராமாராவ்வுக்கு முதலமைச்சர் ஆகும் ஆசை வந்தது. ஜோசியரிடம் அதுகுறித்து கேட்ட போது அந்த ஜோசியரோ குறிப்பிட்ட நட்சத்திரம் ராசி உள்ள கன்னி பெண்ணை திருமணம் செய்துகொண்டால் நீங்கள் முதலமைச்சர் ஆகலாம் என்று கூறினார். இதனையடுத்து தேவிகாவிடம் இந்த விஷயத்தை ராமாராவ் சொன்னார்.

உடனே தேவிகாவோ, அந்த ராசியும், நட்சத்திரமும் எனது மகள் கனகாவுக்கும் இருக்கிறது என்று சொல்லிவிட்டார். பிறகு இருவரும் ரகசிய திருமணம் செய்துகொண்டனர். திருமணம் மட்டும்தான் செய்துகொண்டார் படுக்கைக்கு எல்லாம் அழைக்கவில்லை. திருமணத்துக்காக ராமாராவ் நிறைய பணம் கொடுத்ததாகவும் ஒரு பேச்சு உண்டு. இந்த திருமணம் கனகாவுக்கு உளவியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தியது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X