இயக்குநருக்கு இரண்டாவது மனைவி ஆகிறாரா சமந்தா?.. கவலையில்லையாம்.. பிரபலம் என்ன இப்படி சொல்றாரு?

சென்னை: மையோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த சமந்தா இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பிலும் இறங்கியிருக்கும் அவர்; சுபம் என்ற படத்தை தயாரித்திருக்கிறார். மேலும் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் மீண்டும் அவர் நடிக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.இப்படிப்பட்ட நிலைமையில் அவர் இரண்டாவது திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த சமந்தா கோலிவுட்டில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்துகொண்டிருந்தபோதே தெலுங்கில் என்ட்ரி கொடுத்தார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்தார் அவர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. சைதன்யாவின் குடும்பம் தெலுங்கு சினிமாவின் பவர் சென்ட்டர்களில் ஒன்று. எனவே இந்தக் காதலுக்கு அவர்களது வீட்டில் சம்மதம் கிடைக்குமா என்ற கேள்வி பலரிடமும் எழுந்திருந்தது.

ஒத்துகொண்ட குடும்பம்: நாக சைதன்யாவின் தீவிரத்தை கண்ட நாகார்ஜுனாவும் அவரது குடும்பமும் இவர்களது காதலுக்கு பச்சைக்கொடி காண்பித்தது. அதனையடுத்து கடந்த 2017ஆம் ஆண்டு கோவாவில் வைத்து திருமணமும் நல்லபடியாக முடிந்தது. திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்த அவருக்கு சைதன்யாவும் ஃபுல் சப்போர்ட் செய்துகொண்டிருந்தார். ஒருகட்டத்தில் மாமனார் குடும்பத்திலிருந்து சமந்தா நடிப்பதற்கு எதிர்ப்பு வந்ததாக கூறப்படுகிறது.

Bayilvan Ranganathan has said that Samantha will get married soon

பிரிந்துவிட்ட சமந்தா: ஆனால் சமந்தாவோ நடிப்பதில் உறுதியாக இருந்தார். இதனால் ஆரம்பித்ததாக கூறப்படும் சின்ன சின்ன பிரச்னைகள் நாளடைவில் வலுவடைந்ததாலும் அதன் காரணமாகத்தான் அவர்கள் பிரிந்துவிட்டார்கள் என்றும் ஒரு தகவல் உண்டு. அதேசமயம் சமந்தாவுக்கு வந்த மையோசிடிஸ் நோய்தான் இந்தப் பிரிவுக்கு முழுமுதற் காரணம் எனவும் ஒருசிலர் சொல்வார்கள். ஆனால் அதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை. சம்பந்தப்பட்ட இரண்டு பேருமே அமைதியாகத்தான் இருக்கிறார்கள்.

இரண்டாவது இன்னிங்ஸ்: சைதன்யாவுடனான பிரிவுக்கு பிறகு மையோசிடிஸ் நோய்க்காக சிகிச்சை எடுத்துக்கொண்ட சமந்தா; இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதன்படி அவர் கடைசியாக சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரிஸில் நடித்திருந்தார். மேலும் சுபம் என்ற திரைப்படத்தை தயாரிக்கவும் செய்திருக்கிறார். அதேபோல் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் மீண்டும் நடிக்க அவர் முடிவு செய்திருப்பதாகவும் அதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

திருமணமா?: இதற்கிடையே நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். சமந்தாவோ சிட்டாடல் இயக்குநர்களில் ஒருவரான ராஜை காதலிப்பதாக பேச்சுக்கள் ஓட ஆரம்பித்திருக்கின்றன. ஆனால் அதுகுறித்து சமந்தா இதுவரை எந்த உறுதியான பதிலையும் சொல்லவில்லை. இந்நிலையில் இதுகுறித்து பிரபல பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் தனியார் யூடியூப் சேனலுக்கு பேசியிருக்கிறார்.

பயில்வானின் பேச்சு: அவர் பேசிய அந்த வீடியோவில், "திருமண முறிவு, மையோசிடிஸ் நோய் சிகிச்சைக்கு பிறகு படங்களில் நடித்த சமந்தாவுக்கு வெற்றி கிடைக்கவில்லை. எனவே அவர் வெப் சீரிஸில் நடிக்க ஆரம்பித்தார். அப்போது இயக்குநர் ராஜுடன் டேட்டிங் செய்தார்கள். சமீபத்தில்கூட காளஹஸ்தி கோயிலுக்கு சென்று சேர்ந்து பிரார்த்தனை செய்தார்கள். எனவே அவர்கள் விரைவில் செய்துகொள்வார்கள் என்றே சொல்லப்படுகிறது. அதேசமயம் ராஜுக்கு ஏற்கனவே திருமணம் நடந்திருக்கிறது. அவர் தனது முதல் மனைவியுடன் விவாகரத்து பெற்றாரா என்பது தெரியவில்லை. ஆனால் ராஜை திருமணம் செய்துகொள்வதில் சமந்தா உறுதியாகத்தான் இருக்கிறார். இரண்டாவது மனைவியாக செல்வது பற்றியெல்லாம் அவர் கவலைப்படவில்லை. இருந்தாலும் அவர் அப்படி முடிவெடுத்திருப்பது அவரின் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X