அந்த நடிகைக்கு எம்.எல்.ஏவுடன் திருமணம் முடிந்துவிட்டதாம்.. பிரபலம் கிளப்பிய உச்சக்கட்ட பரபரப்பு

சென்னை: ரேகா நாயர் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். சில படங்களில் நடித்திருக்கும் அவர் தொடர்ந்து யூட்யூப் சேனல்களுக்கு பேட்டியும் அளித்துவருகிறார். வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் கலக்கும் அவர் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதனை பஞ்சராக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் ரேகா நாயர் குறித்து பயில்வான் ரங்கநாதன் மீண்டும் ஒரு வீடியோவில் பேசியிருக்கிறார்.

சின்னத்திரை நாடகத்தில் நடித்து பிறகு சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரேகா நாயர். லீட் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற கனவோடு அவர் திரைத்துறையில் அறிமுகமானாலும் பெரும்பாலும் சைடு ரோல்களே அவருக்கு கிடைத்தன. இருப்பினும் கிடைத்த வாய்ப்பை தவறவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்த அவர் தனக்கு கிடைத்த கதாபாத்திரங்களில் மிகச்சிறப்பாக நடித்தார்.

இரவின் நிழல்: இப்படி துணை கதாபாத்திரங்களில் நடித்தக்கொண்டிருந்த ரேகா நாயருக்கு இரவின் நிழல் ஒளி கொடுத்தது. ஒரே ஷாட்டில் பார்த்திபன் இயக்கத்தில் உருவாகியிருந்த அந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். படம் சரியாக போகாவிட்டாலும் ரேகா நாயருக்கு பெயர் கிடைத்தது. குறிப்பாக அப்படத்தில் அவர் நிர்வாண காட்சியில் நடித்தது பெரும் விவாதப்பொருள் ஆனது. ஆனால் அந்தக் காட்சி ஆபாசமானதாக இருக்கவில்லை.

Bayilvan Ranganathan has said that the marriage between Rekha Nair and the MLA has taken place
Photo Credit:

பற்றவைத்த பயில்வான்: சூழல் இப்படி இருக்க எப்போதும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்து அவதூறாக பேசிவரும் பயில்வான் ரங்கநாதன் இரவின் நிழல் திரைப்படத்தில் ரேகா நாயர் நிர்வாணமாக நடித்ததை விமர்சித்தார். இந்த விவகாரம் முற்ற; அவர் நடைபயிற்சி செல்லும்போது ரேகா நாயர் பயில்வானை மறித்து கேள்வி மேல் கேள்வி கேட்டது குறிப்பிடத்தக்கது. ரேகா நாயர் கேட்டதற்கு பயில்வானால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை.

போட்டுடைக்கும் ரேகா: மனதில் பட்டதை பட்டென்று சொல்லிவிடும் வழக்கம் உடைய ரேகா நாயர் ஒரு பேட்டியில்கூட பயில்வான் ரங்கநாதன் இறந்துபோனால் நான் பட்டாசு வெடித்து கொண்டாடுவேன். நான் அவரிடம் அப்படி பேசியதற்கு பல பெரிய நடிகர்களும், நடிகைகளுமேகூட என்னை பாராட்டினார்கள் என பேசியிருந்தார். இதற்கிடையே அவர் ஒரு எம்.எல்.ஏவின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் ஒரு தகவல் ஓடிகொண்டே இருந்தது. அதனை திட்டவட்டமாக மறுத்தார் ரேகா.

பயில்வான் பேச்சு: இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவில் ரேகா நாயர் குறித்து பேசியிருக்கிறார். அவர் அந்த வீடியோவில், "எம்.எல்.ஏ ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு நடிகை ரேகா நாயரை திருமணம் செய்திருக்கிறார். பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் படத்தில் ரேகா நாயர் நடித்ததை பற்றி விமர்சித்திருந்தேன். உடனே அவரோ நேராக திருவான்மியூருக்கு வந்து என்னிடம் நீ என்ன என்னுடைய புருஷனா?. எப்படி அப்படி விமர்சிக்கலாம் என சண்டை போட்டார்.

எப்படி பழக்கம்: அந்த எம்.எல்.ஏ ஒரு ஜிம் வைத்திருக்கிறார். அதற்கு ரேகா நாயர் அடிக்கடி செல்வார்.அப்போது அவருக்கும் அந்த எம்.எல்.ஏவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பிறகு இரண்டு பேரும் காதலர்களாக மாறினார்கள். இப்போது கணவன் மனைவியாக மாறிவிட்டார்கள்.சமீபத்தில் அந்த எம்.எல்.ஏ ஒரு வீடு கட்டினார். அந்த வீட்டின் திறப்பு விழாவுக்கான பத்திரிகையில் எம்.எல்.ஏவின் பெயரும், ரேகா நாயரின் பெயரும் இடம்பெற்றிருந்தன. அந்த எம்.எல்.ஏ முதலில் தனது மனைவியுடன் நன்றாகத்தான் இருந்தார். ஆனால் அவர்களுக்குள் சில பிரச்னைகள் ஏற்பட்டு மண முறிவு ஏற்பட்டது. அந்த நேரத்தில் சரியாக உள்ளே நுழைந்துவிட்டார் ரேகா" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X