சிவக்குமாரின் ஆசை அதுதான்.. ஜோதிகா நிறைவேற்றவில்லையாம்.. ஓவராக பேசிய பிரபலம்

சென்னை: கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடி சூர்யா - ஜோதிகா. காதலித்து பல வருடங்கள் காத்திருந்து திருமணம் செய்துகொண்டார்கள். இப்போது மும்பையில் வசித்துவரும் அவர்கள் சினிமாக்களில் நடிப்பதில் பிஸியாக இருந்துவருகிறார்கள். ஜோதிகாவுக்கும் சூர்யா ரொம்பவே சப்போர்ட்டாக இருந்துவருகிறார். அதேசமயம் ஜோதிகாவுக்கும் சூர்யாவின் குடும்பத்தினருக்கும் கடந்த சில காலமாகவே பிரச்னை ஓடிக்கொண்டிருப்பதாக கூறப்பட்ட சூழலில் பயில்வான் ரங்கநாதன் ஓவராக பேசியிருக்கிறார்.

சூர்யா தமிழின் டாப் 5 ஹீரோக்களில் ஒருவர். நேருக்கு நேர் படத்தின் மூலம் அறிமுகமான அவர் இதுவரை 42 படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக அவர் நடித்த கங்குவா திரைப்படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. அந்தப் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவானாலும் 200 கோடி ரூபாய்கூட வசூலிக்கவில்லை. இதனால் சூர்யாவும் அவரது ரசிகர்களும் உச்சக்கட்ட அப்செட்டில் இருக்கிறார்கள். அடுத்ததாக அவரது நடிப்பில் ரெட்ரோ படமும், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ஒரு படமும் வெளியாகவிருக்கிறது.

bayilvan ranganathan suriya jyothika

சூப்பர் வாழ்க்கை: இதற்கிடையே அவர் ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தேவ் என்ற மகனும், தியா என்ற மகளும் இருக்கிறார்கள். திருமணத்துக்கு பின் இருவரும் தங்களது வாழ்க்கையை மிக சிறப்பாக நகர்த்திவருகிறார்கள். ஜோதிகாவும் சில வருடங்கள் சினிமாவிலிருந்து ஒதுங்கி குழந்தைகள், குடும்பத்தை பார்த்துவந்தார். தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் ஹிந்தியில் அவர் கடைசியாக ஸ்ரீகாந்த் என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் சில படங்களில் கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது.

சூர்யா ஒரு சிறந்த கணவர்: ஜோதிகா சூர்யாவை ஏகப்பட்ட மேடைகளில் புகழ்ந்திருக்கிறார். அதாவது தனக்கு எல்லா விதத்திலும் மதிப்பு கொடுக்கிறார். நான் மீண்டும் நடிப்பதற்கு மிகப்பெரிய உறுதுணையாக இருந்தவரே சூர்யாதான் என பல மேடைகளில் ஜோதிகா புகழ்ந்திருக்கிறார். அதேபோல் ஜோதிகா குறித்தும் சூர்யா பல மேடைகளில் புகழ்ந்து பேசியிருக்கிறார். சூழல் இப்படி இருக்க இரண்டு பேரும் சென்னையிலிருந்து குடிபெயர்ந்து மும்பையில் செட்டில் ஆகியிருக்கிறார்கள்.

பிரச்னையா?: இதற்கு காரணம் பிரச்னைதான் என்று முதலில் பேசப்பட்டது. ஆனால் அதனை இரண்டு பேருமே மறுத்தார்கள். முக்கியமாக கங்குவா ப்ரோமோஷன் ஒன்றில் பேசியபோது, "ஜோதிகா எனக்காக நிறைய தியாகங்களை செய்திருக்கிறார். அவரது தாய், தந்தையை விட்டுவிட்டு பல வருடங்கள் எனக்காக சென்னையில் இருந்தார். இப்போது அவருக்காக மும்பையில் இருந்தால் என்ன என்று தோன்றியது. அதனால்தான் மும்பைக்கு ஷிஃப்ட் ஆனோம்" என்று தெரிவித்திருந்தார்.

பயில்வான் பேட்டி: இந்நிலையில் பிரபல பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேசுகையில், "தனது மூத்த மகன் குடும்பம், தனது இளைய மகன் குடும்பம், தனது குடும்பம் என அனைவருமே கூட்டு குடும்பமாக வாழ வேண்டுமென்பதுதான் சிவக்குமாரின் ஆசை. ஆனால் ஜோதிகாவோ தனது தாய்க்காக மும்பைக்கு கணவர் சூர்யாவையும், குழந்தைகளையும் அழைத்து சென்றுவிட்டார். சரி அங்கு சென்றுவிட்டார். ஆனால் சென்னை வரும்போதுகூட சிவக்குமாரை அவர் பார்ப்பதில்லை. இந்தக் குடும்பத்தை ஜோதிகா சிதறடித்துவிட்டார்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X