ரம்யா கிருஷ்ணனின் பின்னணி இதுதான்.. பெரிய அரசியல் பேக் கிரவுண்ட்..ரகசியம் உடைத்த பயில்வான் ரங்கநாதன்

சென்னை: நடிகை ரம்யா கிருஷ்ணன் ரசிகர்களால் நீலாம்பரி, ராஜமாதா என்று அழைக்கப்படுபவர். தமிழ் மற்றும் தெலுங்கில் மிகச்சிறந்த நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். பல வருடங்கள் பிஸியான நடிகையாக இருந்தாலும் அவரது பின்னணி குறித்து பெரும்பாலான ரசிகர்களுக்கு தெரியாந்து. இந்த சூழலில் அதுகுறித்து பயில்வான் ரங்கநாதன் ஓபனாக பேசியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகைகளில் ஒருவர் ரம்யா கிருஷ்ணன்.பத்திரிகையாளர் சோவின் உறவினரான இவர் பல வருடங்களாக நடித்துவருகிறார். ஆரம்பத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ஹீரோயினாக நடித்து பிரபலமடைந்தார். அதன் பிறகு காலம் செல்ல செல்ல கேரக்டர் ரோல்களை செய்ய ஆரம்பித்தார். ரம்யா கிருஷ்ணன் செய்த பாத்திரங்களிலேயே காலத்துக்கும் அழிக்க முடியாத கதாபாத்திரம் என்றால் படையப்பா படத்தில் அவர் ஏற்றிருந்த நீலாம்பரி கதாபாத்திரம்.

Bayilvan Ranganathan Reveals Unknown Secrets About Ramya Krishnan

ரஜினி என்ற பெரிய ஆளுமைக்கு வில்லியாக நடித்து அதகளம் செய்திருந்தார். ரஜினியேகூட அந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிப்பை பார்த்து வியந்துபோனார் என்பது குறிப்பிடத்தக்கது. அதை அவரே பல மேடைகளில் கூறியும் இருக்கிறார். படையப்பா படத்தில் நடித்ததிலிருந்து ரம்யா கிருஷ்ணனுக்கு நீலாம்பரி கதாபாத்திரம் ஒரு அடையாளமாகவே மாறிவிட்டது.

மரகதவள்ளி: அதேபோல் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரத்தில் மற்றொரு சிறப்பான கதாபாத்திரம் என்றால் பஞ்ச தந்திரம் படத்தில் அவர் ஏற்றிருந்த மரகதவள்ளி கதாபாத்திரம். அந்தக் கதாபாத்திரத்திலும் படு காமெடியாகவும், கொஞ்சம் கிளாமராகவும் நடித்து அசத்தியிருந்தார் ரம்யா கிருஷ்ணன். குறிப்பாக வந்தேன் வந்தேன் பாடலில் சிம்ரனுக்கு போட்டியாக நடனம் ஆடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ராஜமாதா: இப்படி பல கதாபாத்திரங்களில் கலக்கிய ரம்யா கிருஷ்ணனை இந்தியா முழுவதும் கொண்டு போய் சேர்த்த படம் பாகுபலி. அந்தப் படத்தில் ராஜமாதா என்ற கதாபாத்திரத்தை ஏற்று தனது குரலாலும், நடிப்பாலும் அதகளம் செய்தார். அந்தப் படம் வெளியானதிலிருந்து ரம்யா கிருஷ்ணனை ரசிகர்கள் எங்கல் ராஜமாதாவே என்றுதான் அழைத்து வருகிறார்கள்.

பயில்வான் ரங்கநாதன் வீடியோ: பல வருடங்களாக பிஸியான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் ரம்யா கிருஷ்ணனின் பின்னணி குறித்து பயில்வான் ரங்கநாதன் ஓபனாக பேசியிருக்கிறார். அவர் பேசிய ஒரு வீடியோவில், "ரம்யா கிருஷ்ணன் குறித்து யாருக்கும் பெரிதாக தெரியாது. நடிகரும், அரசியலில் முக்கியமான புள்ளியாக இருந்தவருமான சோ ராமசாமியின் அக்கா மகள்தான் ரம்யா கிருஷ்ணன்.

பிடிக்கவில்லை: ரம்யா கிருஷ்ணன் நடிக்க வந்தது சோ ராமசாமிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதனால் பல வருடங்கள் அவரை சந்திப்பதை சோ தவிர்த்தே வந்தார். ஒருகட்டத்தில் ரம்யா வளர்ந்த பிறகு சரி அவர் சாதித்துவிட்டார் என்று நினைத்து மீண்டும் பேச ஆரம்பித்தார். ரம்யா கிருஷ்ணன் தெலுங்கு இயக்குநர் வம்சியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவரது திருமண வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிருக்கிறது. ஒருமுறை அவரிடம் சென்று ஒரு பத்திரிகையாளர் உங்களுக்கு விவாகரத்து நடந்துவிட்டதா என்று கேட்டதற்கு, லூசு மாதிரி பேசாதீங்க என்று கூலாக சொல்லிவிட்டு சென்றார்.

சிறந்த நடிகை: இதுவரை எந்த கிசுகிசுவிலும் அவர் சிக்காதவர். 50 வயதானாலும் அழகிலும் குறையாதவர். பல கோயில்களுக்கு செல்லும் வழக்கம் உடையவர் அவர். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரத்தில் அனாயசமாக நடிக்கக்கூடியவர். முக்கியமாக ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றில் நடித்தபோது ஜெயலலிதாவாகவே மாறிவிட்டார்" என்றார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பெரும் ஆச்சரியம் அடைந்திருக்கின்றனர். ஏனெனில் ரம்யா கிருஷ்ணனின் தாய் மாமாவான சோ ராமசாமி அரசியலில் முக்கிய ஆளுமையாக இருந்தவர். வாக்கரசியலில் அவர் வராவிட்டாலும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஒருகட்டத்தில் அரசியல் குருவாகவே திகழ்ந்தார் என்ற ஒரு பேச்சு ஓடியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X