சமந்தாவுக்கு வந்த நோய்.. அதுதான் காரணம்.. புது காதலர் யார் தெரியுமா?..ஐயோ பாவம்..எல்லை மீறிய பிரபலம்

சென்னை: நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் சமந்தா. சில வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த அவர்கள் திடீரென விவாகரத்து பெற்றார்கள். சமந்தாவை பிரிந்த பிறகு சோபிதா துலிபாலாவை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார் சைதன்யா. சமந்தா தனது சினிமா கரியரில் கவனம் செலுத்திவருகிறார். இந்தச் சூழலில் சமந்தா குறித்து பரபரப்பான தகவல்களை வெளியிட்டிருக்கிறார் பிரபல பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன்.

சமந்தா முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தவர். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தபோது நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து வீட்டு சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். கோவாவில் அவர்களது திருமணம் பிரமாண்டமாக நடந்தது. திருமணத்துக்கு பிறகும் சமந்தா தொடர்ந்து நடித்துவந்தார். நாக சைதன்யாவும் அவருக்கு ஃபுல் சப்போர்ட்டே செய்துவந்தார். ஆனால் சமந்தா தொடர்ந்து சினிமாவில் நடித்தது சைதன்யாவின் வீட்டுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்பட்டது.

samantha naga chaitanya bayilvan ranganathan


விவாகரத்து பெற்ற சமந்தா: ஆனால் மாமனார் வீட்டுக்கு பிடிக்கவில்லையென்றாலும் தனது நடிப்பில் தொடர்ந்து பிஸியாக இருந்தார். சூழல் இப்படி இருக்க சில வருடங்களுக்கு முன்பு நாக சைதன்யாவும், சமந்தாவும் விவாகரத்து பெற்றனர். அதற்கு காரணம் சமந்தா தொடர்ந்து நடித்ததுதான் என்று சொல்லப்பட்டது. ஆனால் அதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை. விவாகரத்து பற்றி சமந்தாவும் இன்றுவரை வாயை திறக்கவில்லை.

சைதன்யாவின் இரண்டாவது திருமணம்: சமந்தாவை பிரிந்த நாக சைதன்யா இப்போது சோபிதா துலிபாலாவை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். இரண்டு பேரும் கடந்த சில வருடங்களாக டேட்டிங், மீட்டிங் என்று இருந்தார்கள். மகனின் இரண்டாவது காதலை தெரிந்துகொண்ட நாகார்ஜுனா உடனடியாக திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தார். அதனையடுத்து சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. விரைவில் ராஜஸ்தானில் திருமணம் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் சமந்தா: மையோசிடிஸ் நோய் காரணமாக சினிமாவிலிருந்து விலகியிருந்த சமந்தா இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் சிட்டாடல் ஹனி பனி என்ற வெப் சீரிஸில் நடித்திருக்கிறார். அதன் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதில் சமந்தாவின் ஆக்‌ஷன் காட்சிகளை பார்த்த ரசிகர்கள் பயங்கரமாக ஆச்சரியமடைந்திருக்கின்றனர். இந்த வெப் சீரிஸ் தவிர்த்து தமிழ், ஹிந்தி படங்களிலும் அவர் கமிட்டாகியிருப்பதாகவும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.

பயில்வான் பேட்டி: இந்நிலையில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேசிய பயில்வான் ரங்கநாதன், “சமந்தா நாக சைதன்யாவை பிரிந்தபோது அவருக்கு நாகார்ஜுனா குடும்பத்திலிருந்து 50 கோடி ரூபாய் ஜீவனாம்சமாக கொடுத்தார்கள். ஆனால் அதனை வேண்டாமென்று கூறிவிட்டார் சமந்தா. அவருக்கு மையோசிடிஸ் நோயும் வந்தது. அவர் கண்ட கண்ட உணவுகளை சாப்பிட்டார். கெமிக்கல்ஸ் அதிகம் இருக்கும் மேக்கப்பை போட்டுக்கொண்டார். அதனால்தான் அவருக்கு அந்த நோய் வந்ததாக சொல்லப்படுகிறது.

புதிய காதலர்: அதேபோல் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் சமந்தா. அப்போது அவரது கையை பிடித்தபடி ஒரு ஆண் சென்றார். கொஞ்ச நேரத்திலேயே சமந்தாவின் கையை தட்டிவிட்டார் அந்த ஆண் நண்பர். அவர்தான் சமந்தாவின் புதிய பாய் ஃப்ரெண்ட். அதனை பார்க்கும்போது சமந்தாவிடம் வேண்டா வெறுப்பாகத்தான் அவர் பழகுகிறாரோ என்று தோன்றுகிறது. அந்த ஆண் நண்பர் யார் என்பது குறித்து விசாரித்தோம். அவர் ஏற்கனவே திருமணமானவர். அவருக்கு குழந்தைகளும் இருக்கிறார்கள்” என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X