நயன்தாரா செஞ்சது உலக மகா உருட்டாம்.. அய்யய்யோ பிரபலம் இப்படி பேசிட்டாரே
சென்னை: நடிகை நயன்தாரா அடுத்ததாக ராக்காயி, மண்ணாங்கட்டி, டெஸ்ட், டாக்சிக் உள்ளிட்ட படங்களில் கமிட்டாகியிருக்கிறார். சூழல் இப்படி இருக்க சமீபமாக அவர் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிவருகிறார். அதுவும் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ரஜினிகாந்த் குறித்து அவர் பேசியிருந்தது மிகப்பெரிய விவாதத்தை திரைத்துறையினரிடமும், ரசிகர்களிடையேயும் எழுப்பியது. சூழல் இப்படி இருக்க அவர் குறித்து நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் ஓபனாக பேசியிருக்கிறார்.
நயன்தாராவின் நடிப்பில் கடைசியாக ஹிந்தியில் ஜவான் திரைப்படமும், தமிழில் அன்னபூரணி படமும் வெளியானது. அடுத்ததாக அவரது நடிப்பில் ராக்காயி, மண்ணாங்கட்டி என வரிசையாக படங்கள் வரவிருக்கின்றன. இருந்தாலும் அவரது 75ஆவது படமான அன்னபூரணி படம் தோற்றதில் அவர் கொஞ்சம் அப்செட்டாகியிருக்கிறார் என்றும்; இனி வரும் படங்களை வைத்து அதை சரிக்கட்ட வேண்டுமென்பதில் நயன்தாரா ரொமபவே உறுதியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்னேஷ் சிவனுடன் திருமணம்: இதற்கிடையே அவர் நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது அதன் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்தார். பிறகு சில வருடங்கள் கழித்து இரண்டு பேரும் திருமணம் செய்துகொண்டார்கள். மேலும் வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளையும் பெற்றுக்கொண்டார்கள். அவர்களுக்கு உயிர், உலக் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடும் அவர்; சினிமாவிலும் படுபிஸியாக நடித்துவருகிறார். அதனைப் பார்த்து பலரும் ஆச்சரியப்படுகிறார்கள்.
நயன் பற்றிய ஆவணப் படம் முதல் சர்ச்சைவரை: இப்படி பிஸியாக இருக்கும் நயன் சமீபத்தில் ஒரு சர்ச்சையை சந்தித்தார். அதாவது அவரது வாழ்க்கையில் நடந்த அனுபவங்கள் மற்றும் தனது திருமணம் தொடர்பாக ஒரு ஆவணப் படம் உருவானது. கௌதம் மேனன் இயக்கியிருந்தார். நெட்ஃப்ளிக்ஸில் அந்த டாக்குமென்ட்டரி படம் அவரது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த மாதம் 18ஆம் தேதி ஸ்ட்ரீமானது. அதுதான் கடந்த மாதம் முழுக்க டாக் ஆஃப் தி டவுனாக இருந்தது. அதாவது அந்தப் படத்தில் நானும் ரௌடிதான் ஃபுட்டேஜுகளை பயன்படுத்துவதற்கு தனுஷ் அனுமதி மறுக்க; அதையும் மீறி பயன்படுத்தப்பட்டது. இதனால் நீதிமன்றத்தில் தனுஷ் வழக்கு தொடர்ந்தார்.
அடுத்த சர்ச்சை: அந்த சர்ச்சை ஓய்ந்த சூழலில் அடுத்ததாக அவரை சுற்றி இன்னொரு சர்ச்சை எழுந்தது. அதாவது தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், 'சந்திரமுகி படத்தில் எனது முதல் ஷாட்டே ரஜினிகாந்த்துடன். ஆனால் அவர் பெரிய சூப்பர் ஸ்டார் என்று அப்போது எனக்கு தெரியாது. ஒருவேளை தெரிந்திருந்தால் நான் பதற்றமாகியிருப்பேன் என்று நினைக்கிறேன். அப்படி தெரியாமல் இருந்ததுதான் நான் சரியாக நடிக்க உதவியதாக நினைக்கிறேன்' என்றிருந்தார்.
பயில்வான் காட்டம்: அவரது இந்தப் பேச்சை கேட்ட பலரும் நயனுக்கு தலைக்கனம் ஏறிவிட்டது. ரஜினியை தெரியாமல் எப்படி இருந்திருக்கும் என்று ஓபனாகவே பேச ஆரம்பித்தார்கள். இந்நிலையில் பிரபல பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேசிய வீடியோவில், "நயன்தாரா இப்போது தலைக்கனத்தின் உச்சத்தில் இருப்பதாக பாடகி சுசித்ரா சொன்னார். அப்போது அதை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் இப்போதுதான் புரிகிறது அது உண்மை என்று.
உலக மகா உருட்டு: ரஜினிகாந்த் பெரிய ஸ்டார் என்று தெரியாது என நயன்தாரா சொல்லியிருக்கிறார். இது உருட்டிலும் உருட்டு உலக மகா உருட்டு. ஏனெனில் சந்திரமுகி படத்தில் நயன் நடிக்க வருவதற்கு முன்பே ரஜினியின் படங்கள் எல்லாம் இந்திய அளவில் அனைத்து மாநிலங்களிலும் ரிலீஸாகிக்கொண்டுதான் இருந்தன. அப்படி இருக்கும்போது இவருக்கு எப்படி தெரியாமல் இருந்திருக்கும்" என்றார்.


Click it and Unblock the Notifications











