ஐஸ்வர்யா ராயை ஜெயா பச்சனுக்கு பிடிக்கலையா?.. சண்டைக்கு என்ன காரணம்?.. பயில்வான் ரங்கநாதன் ஓபன் டாக்

சென்னை: Aishwarya Rai (ஐஸ்வர்யா ராய்) ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் விவகாரம் குறித்து பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒன்றில் பேசியிருக்கிறார்.

உலக அழகி பட்டம் பெற்று இருவர் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராய். தமிழில் அறிமுகமான அவர் தொடர்ந்து பாலிவுட்டில் அதீத கவனம் செலுத்தினார். அதன் காரணமாக அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்து அந்தப் படங்கள் ஹிட்டடித்ததால் டாப் ஹீரோயினாக அங்கு வலம் வந்தார். மேலும் புகழின் உச்சிக்கே அவர் சென்றார். இடையே தமிழில் அவர் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், பொன்னியின் செல்வன், எந்திரன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

 Bayilvan Ranganathan Talks about Aishwarya Rai Abishek Bachchan Issue

சல்மான் கானுடன் காதல்: ஹிந்தியில் அவர் டாப் நடிகையாக இருந்தபோது நடிகர் சல்மான் கானை காதலித்தார். இரண்டு பேரும் தீவிரமாக காதலித்துவந்தனர். ஆனால் ஒருகட்டத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக அவர்கள் பிரிந்தனர். அந்தக் காதல் முறிவுக்கு சல்மான் கானின் நடவடிக்கைதான் காரணம் என்று இன்றுவரை பரவலாக பாலிவுட்டில் பேசப்படுகிறது.

திருமணம்: சல்மான் கானுடனான காதல் முறிவுக்கு பிறகு ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனை காதலிக்க தொடங்கினார். பிறகு இரண்டு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்கு பிறகும் ஐஸ்வர்யா ராய் தொடர்ந்து சினிமாக்களில் நடிக்க ஆரம்பித்தார். இருவருக்கும் ஆராத்யா என்ற மகள் இருக்கிறார்.

பிரச்னையா?: சூழல் இப்படி இருக்க கடந்த சில வருடங்களாகவே அவர்கள் இரண்டு பேருக்கும் பிரச்னை ஏற்பட்டதாகவும்; அதனால்தான் அவர் அணிவித்த மோதிரத்தை அபிஷேக் பச்சன் தன்னுடைய விரலில் அணிந்துகொள்ளவில்லை என்றும் பேச்சு எழுந்தது. அதுமட்டுமின்றி அபிஷேக் பச்சனிடமிருந்து கூடிய விரைவில் அவர் விவாகரத்து பெற்றுவிடுவார் என்றும் கடந்த சில வாரங்களாகவே பரபரப்பாக பேச்சு ஓடுகிறது.

பயில்வான் ரங்கநாதன் வீடியோ: முக்கியமாக அவர் அபிஷேக் பச்சனின் வீட்டிலிருந்து வெளியேறி தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டதாக கூறப்பட்டது. ஆனால் சில நாட்களுக்கு முன்பு ஆராத்யா படிக்கும் பள்ளியின் ஆண்டுவிழாவில் ஜோடியாக கலந்துகொண்டனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோ வெளியிட்ட்டிருக்கிறார்.

ஜெயா பச்சனுக்கு பிடிக்கவில்லை: அவர் பேசுகையில், "அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்துகொண்டதில் ஜெயா பச்சனுக்கு ஆரம்பத்தில் பிடிக்கவில்லை. ஏனெனில் திருமணத்துக்கு முன்பு வேறு ஒருவருடன் லிவிங் வாழ்க்கையில் இருந்தவர் ஐஸ்வர்யா. அதனால்தான் ஜெயா இந்த திருமணத்துக்கு ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால் கட்டினால் ஐஸ்வர்யாவைத்தான் கட்டுவேன் என அபிஷேக் ஒற்றை காலில் நின்றார்.

ஈகோ: அதனால் திருமணம் செய்து வைத்தனர். சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது வாழ்க்கை இப்போது பிரச்னையில் இருக்கிறது. அதாவது ஜெயா பச்சன் ஏற்கனவே ஒரு டாப் நடிகையாக இருந்தவர். அவருக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் கடந்த சில காலமாகவே பிரச்னை ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்கு இரண்டு பேருக்கும் இடையில் இருக்கும் ஈகோதான் காரணம்.

அவர்கள் இரண்டு பேருக்கும் நடக்கும் பிரச்னையில் தலையிட முடியாமல் அபிஷேக் பச்சனும், அமிதாப் பச்சனும் தவித்துவருகின்றனர். பொதுவெளியில் ஃபார்மாலிட்டிக்காக மட்டும்தான் ஐஸ்வர்யாவும், அபிஷேக்கும் கலந்துகொள்கின்றனர். அவர்களின் இதயம் ஒன்றாக இல்லை. அதே பங்களாவில் தனி போர்ஷனுக்கு வந்திருக்கும் ஐஸ்வர்யா ராய் தனது தாயை உடன் வைத்திருக்கிறார். எப்போது வேண்டுமானாலும் அவர்கள் பிரியலாம்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X