ஆண்ட்ரியா பற்றி அவதூறாக பேசிய பயில்வான் ரங்கநாதன்.. எல்லை மீறி போறாரே ப்பா

சென்னை: நடிகராகவும், பத்திரிகையாளராகவும் விளங்குபவர் பயில்வான் ரங்கநாதன். நடிகர்கள், நடிகைகள் குறித்து அந்தரங்கமான விஷயங்களை பேசி; அதனால் சர்ச்சைகளை உருவாக்கி அதனை வைத்து யூட்யூபில் பிரபலமாக இருப்பவர் அவர். அவரது பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தாலும் அதை பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. சூழல் இப்படி இருக்க ஆண்ட்ரியா குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கும் விஷயம் கண்டனத்தை பெற்றிருக்கிறது.

பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து சர்ச்சைகளை ஏற்படுத்திவருபவர். சினிமாவில் நடித்து, பத்திரிகையாளராக இருந்துவருபவர் இப்போது யூட்யூப் தளத்தில் இயங்கிவருகிறார். தான் பேசும் சேனல்கள் அதிக வியூஸ்களை சந்திக்க வேண்டும் என்பதற்காக நடிகர்கள், நடிகைகள் குறித்த அந்தரங்க விஷயங்களை தொடர்ந்து பேசிவருகிறார். அவர் பேசுவது எல்லாம் பச்சை பொய் என்று ஒருதரப்பினர் கூறினாலும்; கடந்த பல வருடங்களாகவே சினிமாவுடன் தொடர்பில் இருப்பதால் தான் பேசுவது உண்மை என்று பயில்வான் சொல்வது வழக்கம்.

Andrea Bayilvan Ranganathan

பதிலடி: ஆரம்பத்தில் அவரது பேச்சு செலிபிரிட்டிகளால் கண்டுகொள்ளப்படாமல் இருந்தது. ஆனால் காலம் செல்ல செல்ல அவரது பேச்சில் அநாகரீகம் ஒட்டிக்கொள்ள ஆரம்பித்தது. நிலைமை இப்படி இருக்க நடிகை ரேகா நாயர் இரவின் நிழல் படத்தில் நிர்வாணமாக நடித்ததை வைத்து பயில்வான் தாறுமாறாக பேச; ரேகாவோ நேரடியாக பயில்வானிடம் மல்லுக்கு போய்விட்டார். அதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி; ரேகா நாயருக்கு பலரும் தங்களது பாராட்டை கொடுத்தனர். அதேபோல் ராஜன், விஷால், பாலா உள்ளிட்டோரும் தங்களது தரமான பதிலடியை கொடுத்திருக்கின்றனர்.

வழக்கு போடுங்கள்: தனுஷ் - ஐஸ்வர்யா விவகாரம், நடிகை அஞ்சலி தொடர்பான விவகாரம், இயக்குநர் பாலாவுக்கும் அவரது மனைவிக்கும் நடந்த விவாகரத்து என பயில்வான் ரங்கநாதன் பேசாத விஷயங்களே இல்லை. ஆனால் அத்தனையையும் இவர் அருகில் இருந்து பார்த்தபடியே பேசுவார். இதனால் பல பத்திரிகையாளர் சந்திப்புகளில் சலசலப்பும் ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ரியா பற்றி பேச்சு: இந்நிலையில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஆண்ட்ரியா குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன், "ஆண்ட்ரியாவை கர்ப்பமாக்கிய அரசியல்வாதியின் மகன் என்று நான் சொன்னதற்காக என் மீது கோபப்பட வேண்டாம். அதை ஆண்ட்ரியாவே சொல்லியிருக்கிறார். ஆண்ட்ரியா துணிச்சலான வேடங்களில் நடித்தவர். மிஷ்கின் இயக்கத்தில் ஒரு படத்தில் நிர்வாணமாக நடித்திருக்கிறார். ஆனால் படம் இன்னும் வெளியாகவில்லை.

கருக்கலைப்பு: வேலூரை சேர்ந்த ஆங்கிலோ இந்திய பெண் ஆண்ட்ரியா. இவர் ப்ரோக்கன் என்கிற பெயரில் புத்தகமும் எழுதியிருக்கிறார். அந்தப் புத்தகத்தில் அவரே ரகசியத்தை சொல்லியிருக்கிறார். அதாவது தன்னை ஒரு அரசியல்வாதியின் மகன் கர்ப்பமாக்கிவிட்டார். ஆனால் திருமணத்துக்கு மறுத்துவிட்டார். வேறு வழியில்லாமல் நானும் கருக்கலைப்பு செய்துவிட்டேன் என்று அவரே சொல்லியிருக்கிறார்" என்றார். இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். மேலும் பயில்வான் ரங்கநாதன் எல்லை மீறி போகிறார் என்றும் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X