விக்னேஷ் சிவனை திருமணம் செஞ்சு ஒழுங்கா இருந்திருக்கலாமே?.. நயன்தாரா பற்றி ஓவராக பேசிய பிரபலம்
சென்னை: நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு உயிர், உலக் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க சமீப காலமாக நயனும், விக்கியும் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கிவருகிறார்கள். இந்நிலையில் அவர்கள் குறித்து பிரபல பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கும் வீடியோ ஒன்று ரசிகர்களிடையே உச்சக்கட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
போடா போடி படத்தில் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன் நடிகை நயன்தாரா, விஜய் சேதுபதியை வைத்து தனது இரண்டாவது படமாக நானும் ரௌடிதான் படத்தை இயக்கினார். அந்தப் படத்தின்போது நயனுக்கும், அவருக்கு ஏற்பட்ட காதல் இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணத்தில் முடிந்தது. அவர்கள் வாடகை தாய் மூலம் உயிர், உலக் என்ற இரண்டு மகன்களை பெற்றுக்கொண்டனர். திருமணத்துக்கு பிறகு இருவருமே தங்களது கரியரில் பிஸியாக இருக்கிறார்கள்.

நயன் பேட்டி: கரியரில் பிஸியாக இருக்கும் அளவுக்கு சர்ச்சைகளிலும் சிக்கிவருகிறார்கள். அந்தவகையில் நயன் சமீபத்தில் தனியார் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனது கடந்த காலம் குறித்தும், விக்னேஷ் சிவனை திருமணம் செய்தது குறித்தும் பல விஷயங்களை பேசியிருந்தார். இந்நிலையில் அதுகுறித்து பிரபல பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் சில விஷயங்களை பேசியிருக்கிறார்.
பயில்வான் வீடியோ: அவர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "நயன்தாரா முன்பெல்லாம் பேசவே மாட்டார். இப்போது அவர் பேசினாலே சர்ச்சையை ஏற்படுத்திவிடுகிறது. இவர் 50 வருடங்களுக்கு முன்பு சினிமாவில் நடிக்க வந்தது மாதிரி பேசுகிறார். தான் நடிக்க வந்த சமயத்தில் நிறைய நடிகைகள் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாகவும்; அது வெற்றிகரமாக இருந்ததாகவும் பேசியிருக்கிறார். அதாவது பிரபுதேவாவை காதலித்தது குறித்து இப்படி பேசியிருக்கிறார்.
எச்சில் இலை: யாராவது எச்சில் இலையில் சாப்பிடுவார்களா?.. இந்தக் காலத்தில் கணவர் சாப்பிட்ட தட்டில் மனைவிகூட சாப்பிடுவது இல்லை. நயன்தாரா நடிகைதானே. புதிதாக ஒருவரை திருமணம் செய்துகொள்ள வேண்டியதுதானே. பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்கு பிறகு விக்னேஷ் சிவனை திருமணம் செய்தார். இப்போதாவது சரியாக இருக்கலாமே. ஆனால் விக்கியை திருமணம் செய்ததில் குற்ற உணர்ச்சியோடு இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்.
கொடுமையை அனுபவிக்கிறாரா?: விக்னேஷ் சிவனை மட்டும் தான் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்திருந்தால் விக்கியின் பெயர் நன்றாக இருந்திருக்கும் என்று சொல்கிறார். ஆக விக்னேஷ் சிவன் இத்தனை நாட்களாக கொடுமையை அனுபவிக்கிறாரா. ஒருவேளை நயன்தாராவின் கூஜாவாக விக்னேஷ் சிவன் இருக்கிறாரோ என்றுதான் எங்களுக்கெல்லாம் தோன்றுகிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











