பிரபுவை ஏமாற்றினாரா நயன்தாரா? எதற்கு இவ்வளவு பணத்தாசை.. கிழித்து தொங்கவிட்ட பயில்வான்!

சென்னை: நயன்தாராவின் ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் படத்தில் இருந்து 3 விநாடி காட்சியை பயன்படுத்தியதால், தனுஷ் 10 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்து இருக்கும் நிலையில், சந்திரமுகி படத்தின் காட்சியை அனுமதியின்றி பயன்படுத்தியதாக மற்றொரு சர்ச்சை உருவாகி இருக்கும் நிலையில், இதுகுறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன், தனுஷை தொடர்ந்து நயன்தாரா பிரபுவையும் ஏமாற்றிவிட்டார் என்றார்.

நடிகர் பிரபு சந்திரமுகி படத்தை சிவாஜி புரொடக்‌ஷன் மூலம் தயாரித்திருந்தார். சந்திரமுகி படத்தின் காட்சிகளை நயன்தாராவின் ஆவணப்படத்தில் பயன்படுத்தி இருந்தார். ஆவண படத்திற்கு நயன்தாரா நெட்பிளிக்ஸில் கோடிக்கணக்கில் பணம் பெற்று இருந்தார். அப்படி இருக்கும் போது அந்த படத்தின் காட்சிகளுக்காக பயன்படுத்தியதற்காக சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு பணம் கொடுத்து இருக்க வேண்டும். ஆனால், பிரபுவிடம் அனுமதி வாங்காமலே சந்திரமுகி படத்தின் காட்சியை நயன்தாரா ஆவண படத்தில் பயன்படுத்தி இருக்கிறார்.

nayanthara chandramukhi bayilvan ranganathan

சந்திரமுகி படகாட்சி: இதற்காகத்தானே தனுஷ் உயர்நீதி மன்றத்தில் நஷ்ட ஈடாக 10 கோடி கேட்டு வழக்கு தொடுத்து இருக்கிறார். அதேபோல பிரபுவும் தற்போது 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நயன்தாரா இன்னும் எத்தனை பேரை ஏமாற்றுவார்கள் இதற்கு ஒரு முடிவே இல்லையா? பிரபும் சந்திரமுகி படத்தை கஷ்டப்பட்டுத்தானே எடுத்து இருப்பார். அவரிடம் இவ்வளவு தான் கொடுக்க முடியும் என்று சொல்லி இருக்கலாமே. எதற்கு நயன்தாராவிற்கு இவ்வளவு பணத்தாசை. ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடைசியில் பிரபுவையும் மாற்றிவிட்டார்.

எல்லாம் திமிர்: யாரிடமும் எந்த பேச்சுவார்த்தைக்கும் நயன்தாரா செல்வதில்லை, நடிகர் சங்கத்தில் தகராறு, தயாரிப்பாளர் சங்கத்தின் தகராறு, எந்தவித பஞ்சாயத்திற்கும் அவர் வரவே மாட்டார். விக்னேஷ் சிவனின் அம்மா வடபழனி காவல் நிலையத்தில், இன்ஸ்பெக்டராக இருந்தார். அந்த திமிரில் தான் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் நயன்தாராவிற்கு நல்லதே இல்லை என்று பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

இந்நிலையில், சந்திரமுகி பட தயாரிப்பு நிறுவனம், நயன்தாரா மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை என்று கூறியுள்ளது. 5 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டதாக வெளியான செய்தியையும் நிராகரித்துள்ளனர். ஆவணப்படத்தில் காட்சிகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X