சிவக்குமார் குடும்பத்தின் முகத்தில் விழிக்க பிடிக்கவில்லையாம்.. ஜோதிகா பற்றி ஓவராக பேசிய பயில்வான்

சென்னை: சூர்யாவும் ஜோதிகாவும் தாங்கள் இணைந்து நடித்த முதல் படமான பூவெல்லாம் கேட்டுப்பார் படத்திலிருந்தே காதலித்தனர். முதலில் சூர்யாவின் வீட்டில் இந்தக் காதலுக்கு எதிர்ப்பு எழுந்தது. காலம் செல்ல செல்ல மனம் மாறிய சிவக்குமார் இருவரின் திருமணத்துக்கும் பச்சை கொடி காண்பித்தார். அதனையடுத்து இருவரும் திருமணம் செய்துகொண்டு சிறந்த ஜோடியாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள்.

கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவர் சூர்யா. அதேபோல் ஜோதிகாவும் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்தவர். இரண்டு பேரும் சேர்ந்து முதலில் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் இணைந்து நடித்தார்கள். அப்போதிருந்தே இரண்டு பேரும் காதலிக்க தொடங்கிவிட்டார்கள். பிறகு வீட்டு சம்மதம் கிடைக்காததால் தங்களது திருமணத்துக்காக பல வருடங்கள் காத்திருந்தார்கள்.

suriya jothika bayilvan ranganathan

தியா, தேவ்: ஒருவழியாக சூர்யா தனது வீட்டு சம்மதத்தை பெற்றதையடுத்து அவர்களது திருமணம் கடந்த 2006ஆம் ஆண்டு நடந்தது. அவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் இருக்கிறார்கள். தங்களது குழந்தைகளின் பெயரில்தான் 2D நிறுவனத்தையும் அவர்கள் நடத்தி வருகிறார்கள். கோலிவுட்டின் மிகச்சிறந்த ஜோடிகளாக வலம் வந்துகொண்டிருக்கும் சூர்யாவும், ஜோதிகாவும் இப்போது மும்பையில் செட்டில் ஆகியிருக்கிறார்கள்.

பிரச்னையா?: ஜோதிகாவும் திருமணத்துக்கு பிறகு இப்போது பிஸியாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார். முக்கியமாக பாலிவுட்டில் அவரது கவனம் முழுவதுமாக திரும்பியிருக்கிறது. அதன் காரணமாகத்தான் சூர்யாவும் ஜோதிகாவும் மும்பையில் செட்டில் ஆகிவிட்டதாக தெரிகிறது. ஆனால் சிவக்குமார் வீட்டுடன் ஜோதிகாவுக்கு பிரச்னை ஏற்பட்டதுதான் மும்பையில் செட்டில் ஆக காரணம் என்றும் ஒரு வதந்தி கடந்த சில காலமாக பரவியது.

மறுத்த ஜோதிகா: ஆனால் இதனை ஜோதிகா திட்டவட்டமாக மறுத்தார். தான் மீண்டும் நடிக்க வந்ததில் சூர்யாவின் தந்தை சிவக்குமாருக்கு மகிழ்ச்சிதான். எங்களுக்குள் எந்தவிதமான பிரச்னையும் இல்லை என்று ஆணித்தரமாக கூறினார். இருந்தாலும் இந்த வதந்தி ஓய்ந்தபாடில்லை. இதற்கிடையே சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சூர்யா, 'ஜோதிகா 20 வருடங்களுக்கும் அதிகமாக அவரது தாய், தந்தையை விட்டுவிட்டு எனக்காக சென்னையில் இருக்கிறார். அவர் எனக்காக நிறைய தியாகங்களை செய்துவிட்டார்.

அவர்தான் எல்லாமே: அப்படி இருக்கும்போது நான் மட்டும் எதற்காக என்னை பற்றி மட்டுமே யோசிக்க வேண்டும். அதனால்தான் மும்பைக்கு சென்றோம். ஜோதிகாதான் எனக்கு எல்லாமே' என்று தெரிவித்திருந்தார். இதனையடுத்து இருவருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை என்று உறுதியானது. அதேசமயம் கங்குவா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜோதிகா வரவில்லை. எனவே அவர்களுக்குள் பிரச்னை என்று மீண்டும் பேச்சுக்கள் எழுந்தன.

பயில்வான் ரங்கநாதன் பேட்டி: இந்நிலையில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேசிய பயில்வான் ரங்கநாதன், 'சூர்யா என்னைவிட உயரம் குறைவு என்று கங்குவா ஹீரோயின் திஷா பதானி அசிங்கப்படுத்தியிருக்கிறார். ஒருபக்கம் இது இருக்க மறுபக்கம் கங்குவா தொடர்பான எந்த நிகழ்ச்சியிலும் ஜோதிகா பங்கேற்கவில்லை. சென்னையில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் சிவக்குமார் மற்றும் குடும்பத்தினர் கலந்துகொண்டார்கள். ஆனால் ஜோதிகா வரவில்லை. ஒருவேளை அங்கு வந்தால் சிவக்குமார் குடும்பத்தின் முகத்தில் விழிக்க வேண்டியதாக இருந்திருக்கும். அது அவருக்கு பிடிக்காததால்தான் வரவில்லை. சரி இங்குதான் வரவில்லை என்றால்; மும்பையில் இருக்கும் அவர் அங்கு நடக்கும் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில்கூட கலந்துகொள்ளவில்லை' என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X