தமன்னாவிற்கு அந்த தோஷம் இருக்கா? காமாக்யா கோவிலுக்கு ஏன் போனார் தெரியுமா? பயில்வான் சொன்ன தகவல்!

சென்னை: கோலிவுட், பாலிவுட் என கலக்கி வரும் நடிகை தமன்னா, குவஹாத்தியில் உள்ள காமாக்யா கோவிலுக்கு தனது பெற்றோருடன் சென்று சாமி தரிசனம் செய்தார். அந்த போட்டோக்கள் இணையத்தில் வெளியான நிலையில், தமன்னா அந்த கோவிலுக்கு சென்றதுக்கான காரணத்தை பயில்வான் ரங்கநாதன் தனது வீடியோவில் கூறியுள்ளார்.

நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் திரைப்படங்களில் நடித்து அனைவரும் விரும்பும் நடிகையாக இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சரிந்து இருந்த இவரின் மார்க்கெட் தற்போது உச்சத்தில் உள்ளது. அதற்கு காரணம் லஸ்ட் ஸ்டோரீஸ், ஜீ கர்தா உள்ளிட்ட வெப் தொடர்களில் அளவுக்கு மீறி கவர்ச்சி காட்டி நடித்தது தான். அதுமட்டுமில்லாமல், ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தில் காவாலா பாடலுக்கு குத்தாட்டம் போட்டு அனைவரின் வாயையும் பிளக்க வைத்தார்.

tamannaah kamakhya temple bayilvan ranganathan

நடிகை தமன்னா: இதைத்தொடர்ந்து இவர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக, எட்டு முழப்புடவை சுற்றிக்கொண்டு கவர்ச்சி காட்டாமல் நடித்திருந்தார். இந்த படம் பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூலை பெற்றது. படம் முழுக்க கவர்ச்சி காட்டாமல் நடித்த தமன்னா தனது ரசிகர்கள் ஏமாந்து போகக்கூடாது என்று படத்தில் எண்ட் கார்டு போட்ட பிறகும், இறங்கி கவல்ரச்சி ஆட்டம் போட்டிருந்தார்.அந்த ஆட்டத்தை பார்க்க பல இளசுகள் அரண்மனை 4 படத்தை கடைசி வரை சீட்டை விட்டு எழுந்திருக்காமல் பார்த்தனர்.

விளம்பரத்தால் சிக்கல்: இதையடுத்து, விளம்பரத்தில் நடித்த தமன்னா சட்ட சிக்கலில் சிக்கினார். அதாவது, ஐபிஎல் போட்டிகளை ஃபேர்பிளே செயலியில் சட்ட விரோதமாக ஒளிபரப்பியதாக மகாதேவ் HPZ TOKEN செயலி நிறுவனத்தின் மீது புகார் எழுந்தது. இதையடுத்து கடந்தாண்டு பண மோசடி வழக்குப் பதியப்பட்டு ஓராண்டாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். அந்நிறுவனத்தின் விளம்பர தூதராக இருந்து வந்த நடிகை தமன்னா, அந்த நிறுவனத்தின் சார்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டதால், விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை அவருக்கு சம்மன் அனுப்பி இருந்த

tamannaah kamakhya temple bayilvan ranganathan

எந்த குற்றச்சாட்டும் இல்லை: இதையடுத்து, நடிகை தமன்னா தனது பெற்றோருடன் அசாமிற்கு சென்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். தமன்னாவிடம் 5 மணிநேரத்திற்கும் மேலாக அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. தமன்னாவிற்கு எதிராக குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை என்றும் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. விசாரணையைத் தொடர்ந்து, தமன்னா குவஹாத்தியில் உள்ள காமாக்யா கோவிலுக்கு தனது பெற்றோருடன் சென்றிருந்தார். அந்த போட்டோக்கள் இணையத்தில் வெளியானது.

காமாக்யா கோவில்: இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய பயில்வான் ரங்கநாதன், அசாமில் அமலாக்கத்துறை விசாரணைக்கு சென்ற தமன்னா, விசாரணையை முடித்துவிட்டு நேராக காமாக்யா கோவிலுக்கு சென்றார். அந்த கோவில் காமசூத்ரா கோவில் என்று சொல்லப்படுகிறது. இந்த கோவிலுக்கு தமன்னா சென்றதற்கான காரணம் என்ன என்று யாருக்கும் புரியாத மர்மமாக இருக்கிறது. தமன்னா, காதலிப்பதாக சொன்னார், சொன்னதோடு சரி இன்னும் திருமணம் நடைபெறவில்லை என்று பயில்வான் அதில் பேசி உள்ளார்.

தோஷம் இருக்கா: அசாமில் அமைந்துள்ள காமாக்யா கோவிலில் எந்தவிதமான சிலை வழிபாடும் இல்லை, இந்த கோவிலில் பெண்ணின் யோனியைத்தான் கடவுளாக வழிபடுகிறார்கள்.இந்த கோவிலுக்கு வந்து வழிபாடு நடத்தினால், பெண் பூப்பெய்வது, குழந்தை பேரு, திருமண தோஷம் நீங்கும் என்பது ஐதீகமாக உள்ளது. இந்த கோவிலுக்கு தமன்னா சென்று வழிபாடு நடத்தி உள்ளதால், ஒரு வேளை அவருக்கு ஏதாவது தோஷம் இருக்குமோ என இணையவாசிகள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X