Pooja Hegde: அடேங்கப்பா.. 40 கோடிக்கு பங்களா வாங்கிய பூஜா ஹெக்டே.. அதுவும் எங்க தெரியுமா?

மும்பை: நடிகை பூஜா ஹெக்டே தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் நடித்து வருகிறார். தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த பூஜா ஹெக்டே சமீப காலமாக தனது முழு கவனத்தையும் பாலிவுட் பக்கம் திருப்பி உள்ளார். சல்மான் கான் உடன் இணைந்து நடிக்கும் போது அவரை காதலிப்பதாக கிசுகிசுக்கள் கிளம்பின. ஆனால், 'கிஸி கா பாய் கிஸி கி ஜான்' படம் ஓடாத நிலையில், அந்த வதந்தி முடிவுக்கு வந்தது.

ஆனாலும், தொடர்ந்து இந்தி படங்களையே குறிவைத்து வரும் பூஜா ஹெக்டே மும்பையில் தற்போது புதிதாக 40 கோடி ரூபாய்க்கு பங்களா வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Beast actress Pooja Hegde bought a house for 40 crores in Mumbai

மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்து வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான பூஜா ஹெக்டே ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் இந்தியில் வெளியான மொஹஞ்சதாரோ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.

தெலுங்கில் ஹிட் படங்கள்: முகமூடி படம் ஃபிளாப்பான நிலையில், தெலுங்கில் ஒக லைலா கோசம் படத்தில் நடித்து டோலிவுட்டுக்கு சென்ற பூஜா ஹெக்டே அல்லு அர்ஜுன் உடன் இணைந்து நடித்த துவடு ஜகநாதம் திரைப்படத்தின் மூலம் பிளாக்பஸ்டர் வெற்றியை முதல் முறையாக ருசித்தார். 2019ம் ஆண்டு மகேஷ் பாபுவுடன் அவர் இணைந்து நடித்த மகரிஷி திரைப்படமும் மெகா பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. மீண்டும் அல்லு அர்ஜுன் உடன் இணைந்து அலா வைகுந்தபுரமுலோ படத்தில் நடித்து இந்தியா முழுவதும் புட்டபொம்மாவாக பிரபலமானார்.

ஃபிளாப் குயின்: டோலிவுட்டில் தொடர்ந்து ஹிட் கொடுத்து வந்த பூஜா ஹெக்டேவுக்கு தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் பல படங்கள் குவிந்தன. பிரம்மாண்ட படங்களில் அடுத்தடுத்து கமிட்டான பூஜா ஹெக்டே பீஸ்ட், ராதே ஷ்யாம், ஆச்சார்யா, சல்மான் கானின் கிஸி கா பாய் கிஸி கி ஜான் என வரிசையாக பல தோல்விகளை கொடுத்து ஃபிளாப் குயினாக மாறிவிட்டார்.

அதிரடி நீக்கம்: மகரிஷி படத்தைத் தொடர்ந்து மீண்டும் மகேஷ் பாபு படத்தில் பூஜா ஹெக்டே நடித்து வந்த நிலையில், குண்டூர் காரம் படத்தில் பூஜா ஹெக்டேவுக்கு பதிலாக ஸ்ரீலீலாவை நடிக்க வைத்து விட்டதாக தகவல்கள் வெளியாகின. பூஜா ஹெக்டே அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பின்னர் பெரிய பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வந்த நிலையில், தேவா எனும் ஒரு இந்தி படத்தில் மட்டும் அவர் நடித்து வருகிறார்.

40 கோடிக்கு வீடு: இந்நிலையில், மும்பையில் சுமார் 40 கோடி ரூபாய்க்கு பிரம்மாண்ட வீடு ஒன்றை பூஜா ஹெக்டே வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடலை பார்த்தபடி அந்த பிரம்மாண்ட வீடு அமைந்துள்ளது என்கின்றனர். சமீபத்தில் சொகுசு கார் ஒன்றையும் பூஜா ஹெக்டே வாங்கியிருந்தார். படங்கள் தோல்வியை தழுவினாலும் பெரிய படங்களில் நடித்து சம்பாதித்த காசை எல்லாம் சொத்துக்களாக வாங்கிப் போட்டு வருகிறார் பூஜா ஹெக்டே எனக் கூறுகின்றனர். 40 கோடி ரூபாய்க்கு வீடு வாங்கிய நிலையில், அவரது ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 70 கோடி ரூபாய் இருக்கும் எனக் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X