ஐயோ நம்ம மைண்ட் வேற எங்கேயோ போகுதே.. சேலை கட்டி ரெடியான பீஸ்ட் நாயகி.. பறக்குது கமெண்ட்ஸ்!

சென்னை: நடிகை பூஜா ஹெக்டே கவர்ச்சியாக சேலை கட்டி ரெடியாகி உள்ள புகைப்படத்தை வெளியிட்டு வைரலாக்கி உள்ளார்.

தளபதி 65 படமான பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார்.

இந்நிலையில், பூஜா ஹெக்டேவின் போட்டோவை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள் எக்கச்சக்க கமெண்ட்டுகளையும் அடுக்கி உள்ளனர்.

பீஸ்ட் நாயகி

பீஸ்ட் நாயகி

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகி உள்ளார். வரும் ஜூலை 1ம் தேதி முதல் சென்னையில் நடைபெற உள்ள படப்பிடிப்பில் நடிகர் விஜய்யுடன் பாடல் காட்சிக்காக நடனமாட உள்ளாராம் பூஜா ஹெக்டே.

ரெடி ஆகிட்டேன்

ரெடி ஆகிட்டேன்

இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் செம கவர்ச்சியாக சேலை கட்டியிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, ஏதோ ஒரு நிகழ்ச்சி ஒன்றுக்கு செல்ல ரெடியாகி விட்டேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

கவர்ச்சி ஜாக்கெட்

கவர்ச்சி ஜாக்கெட்

நடிகை பூஜா ஹெக்டே வெளியிட்ட சேலை புகைப்படத்தில் அவரது ஜாக்கெட் மிகவும் கவர்ச்சியாக இருப்பதை பார்த்து ஏகப்பட்ட ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர். மேலும், பீஸ்ட் நாயகியின் அழகை வர்ணித்து ரசிகர்கள் அடித்துள்ள கமெண்ட்டுகள் வைரலாகி வருகின்ரன.

செம்மையா இருக்கீங்க

செம்மையா இருக்கீங்க

குக் வித் கோமாளி புகழின் புகைப்படத்தை பதிவிட்ட கோலிவுட் ரசிகர்கள் நீங்க செம்மையா இருக்கீங்க என ஹார்ட்டீன்களை குவித்து வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் லட்சக் கணக்கான ரசிகர்களை இந்த புகைப்படங்கள் ஈர்த்துள்ளன.

ஏஞ்சல்

ஏஞ்சல்

மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்தின் மூலம் நடிகையாக கோலிவுட்டில் அறிமுகமானவர் பூஜ ஹெக்டே. தளபதி விஜய் திருமலை படத்தில் வாழ்க்கை ஒரு வட்டம் என சொல்வது போல மீண்டும் அந்த வசனத்தை சொன்ன தளபதி படத்தின் மூலமே தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்திருக்கிறார் இந்த ஏஞ்சல்.

ஐயோ நம்ம மைண்ட்

ஐயோ நம்ம மைண்ட்

பூஜா ஹெக்டேவின் கவர்ச்சி சேலை லுக்கை பார்த்த நெட்டிசன்கள் அவரை பங்கமாக ட்ரோல் பண்ணியும் டபுள் மீனிங் கமெண்ட்டுகளை போட்டும் வருகின்றனர். இந்த தளபதி ரசிகர் "ஐயோ நம்ம மைண்ட் வேற எங்கேயோ போகுதே" என கண்களை மூடிக் கொண்டுள்ளார்.

Recommended Video

பல்ஸ் ஆக்சிமீட்டர் எப்படி பயன்படுத்துவது.. அழகாக சொல்லிக்கொடுக்கும் பூஜா ஹெக்டே - வீடியோ
பீஸ்ட் மோடு

பீஸ்ட் மோடு

பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு போட்டி போடும் அளவுக்கு ஏகப்பட்ட ஃபேன் மேட் போஸ்டர்கள் வந்தாலும், நடிகர் விஜய்யையும் நாயகி பூஜா ஹெக்டேவையும் சேர்த்து வைத்து எடிட் பண்ணி உள்ள இந்த போஸ்டர் நிஜமாவே பீஸ்ட் மோடு தான்.

பீஸ்ட் ஷூட்டிங்கிற்கா

பீஸ்ட் ஷூட்டிங்கிற்கா

எங்கேயோ போக ரெடியாகிட்டேன் என பூஜா ஹெக்டே போட்டுள்ள கேப்ஷனை பார்த்த ரசிகர்கள் இப்பவே பீஸ்ட் படத்தின் ஷூட்டிங்கிற்கு கிளம்பிட்டீங்களா என்றும் கேட்டு வருகின்றனர். ஆனால், டேக்கில் நகைக் கடை ஒன்றை பூஜா டேக் செய்துள்ளதால் நகைக் கடை திறப்பு விழா அல்லது விளம்பரத்திற்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X