கவின் ஜோடிக்கு கல்யாணம் ஆகப்போகுது.. ’மஞ்சுமெல் பாய்ஸ்’ நடிகரை மணக்கப்போகும் பீஸ்ட் பட நடிகை!

திருவனந்தபுரம்: மலையாள நடிகை அபர்ணா தாஸ் தமிழில் விஜய் நடித்து வெளியான பீஸ்ட் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்த படத்துல அவருக்கு சவாலான கதாபாத்திரம் அமைந்திருந்தது. அதன் பின்னர் கடந்த ஆண்டு கவின் நடிப்பில் வெளியான டாடா படத்தில் ஹீரோயினாக நடித்து கோலிவுட் ரசிகர்களின் கனவு கன்னியாகவே மாறிவிட்டார் அபர்ணா தாஸ்.

நடிகை அபர்ணா தாஸ் மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் நடித்த நடிகரை இந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அவர்களின் திருமண அழைப்பிதழ் ஒன்று சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.

Beast and Dada actress Aparna Das tie the knot soon with Manjummel Boys actor Deepak Parambol

அபர்ணா தாஸ் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்பதே பல இளைஞர்களுக்கு அதிர்ச்சியாக மாறியுள்ளது. கேரளாவில் உள்ள ரசிகர்கள் அபர்ணா தாசுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகை அபர்ணா தாஸ்: கடந்த 2018 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான நியான் பிரகாஷன் படத்தில் ஹீரோயினாக நடித்த அறிமுகமானவர் அபர்ணா தாஸ். 2019 ஆம் ஆண்டு வெளியான மனோகரம் படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் 2022 ஆம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான பீஸ்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார். பிரியன் ஒட்டத்திலானு, சீக்ரெட் ஹோம் உள்ளிட்ட மலையாள படங்களில் நடித்த அபர்ணா தாஸ் தெலுங்கில் ஆதிகேஷவா படத்தின் மூலம் கடந்த ஆண்டு அறிமுகமானார்.

Beast and Dada actress Aparna Das tie the knot soon with Manjummel Boys actor Deepak Parambol

கவின் பட ஹீரோயின்: கணேஷ் கே. பாபு இயக்கத்தில் கடந்த ஆண்டு கவின் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற டாடா படத்தில் ஹீரொயினாக அளவான நடிப்பை கொடுத்து இளைஞர்களை கவர்ந்திருந்தார் அபர்ணா தாஸ். தொடர்ந்து அதே போல பல தமிழ் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், தற்போது திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மஞ்சுமெல் பாய்ஸ் நடிகர் மாப்பிள்ளை: அபர்ணா தாஸ் நடித்த 2வது படமான மனோகரம் படத்தில் நடித்த தீபக் பரம்பொல் என்பவருடன் காதல் ஏற்பட்டதாகவும் அவரைத்தான் தற்போது திருமணம் செய்துக் கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் பெற்ற மஞ்சுமெல் பாய்ஸ் படத்திலும் தீபக் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Beast and Dada actress Aparna Das tie the knot soon with Manjummel Boys actor Deepak Parambol

திருமண அழைப்பு: இதுவரை அபர்ணா தாஸ் மற்றும் தீபக் பரம்பொல் இருவரும் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடாத நிலையில், அபர்ணா தாஸ் - தீபக் திருமண அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகின்றன. இந்த மாதமே இருவரும் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும் ஏப்ரல் 24ம் தேதி புதன்கிழமை திருமணம் ஆகப்போவதாக அந்த அழைப்பிதழில் இடம்பெற்றுள்ளது.

குவியும் வாழ்த்துகள்:
அபர்ணா தாஸ் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். எளிமையான முறையில் திருமணம் செய்துக் கொள்ளப் போகிறார் என்றே தகவல்கள் வெளியாகி உள்ளன. மஞ்சுமெல் பாய்ஸ் வெற்றியுடன் உடனடியாக திருமணம் செய்துக் கொள்ள முடிவெடுத்து விட்டார் என தீபக் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X