மெழுகு சிலை போல ஜொலிக்கும் பீஸ்ட் பட நடிகை!

சென்னை : அலா வைகுண்டபுரம்புலோ வெற்றிக்குப் பிறகு நடிகை பூஜா ஹெக்டே இப்பொழுது இந்திய அளவில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டு உள்ளார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் மீண்டும் நடிக்க விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக மீண்டும் சென்னை வந்துள்ள பூஜா ஹெக்டே இப்பொழுது மெழுகு சிலை போல ஜொலிக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை பகிர்ந்து லைக்குகளை குவித்து வருகிறார்.

கொஞ்சம் கேப் விட்டு

கொஞ்சம் கேப் விட்டு

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா சூப்பர் ஹீரோவாக நடித்த முகமூடி படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை பூஜா ஹெக்டே . ஆனால் முகமூடி எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இதனால் தமிழ் சினிமாவிற்கு கொஞ்சம் கேப் விட்டு பாலிவுட் மற்றும் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.

புட்டபொம்மா பாடல்

புட்டபொம்மா பாடல்

இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான அலா வைகுண்டபுரம்லோ திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்று உலக அளவில் வசூல் சாதனை புரிந்தது இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக க்யூட்டான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் அதேசமயம் இப்படத்தில் இடம்பெறும் புட்டபொம்மா பாடல் இவரை உலக அளவில் மிகவும் பிரபலமாக்கியது.

Recommended Video

கொரோனா லாக்டவுன் நேரத்துல இப்படியொரு ட்ரிப்.. 300 கி.மீ தூரம் பைக்கில் சென்றுவந்த பிரபல ஹீரோயின்!
தமிழில் ரீ என்ட்ரி

தமிழில் ரீ என்ட்ரி

அலா வைகுண்டபுரம்லோ படத்திற்கு பிறகு இந்திய அளவில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார் பூஜா ஹெக்டே நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்க கோலமாவு கோகிலா பட இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் பீஸ்ட் திரைப்படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

ஃபிளவர் காஸ்ட்யூமில்

ஃபிளவர் காஸ்ட்யூமில்

ஏற்கனவே சென்னை படப்பிடிப்பில் கலந்து கொண்டு முடித்துக் கொடுத்த பூஜா ஹெக்டே இப்பொழுது அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக இன்று மீண்டும் சென்னைக்கு வருகை தந்துள்ளார். இதில் விஜய்க்கும் பூஜாவுக்கும் இடையேயான ரொமான்ஸ் காட்சிகள் எடுக்கப்பட உள்ளது. பீஸ்ட் படத்தின் மூலம் தமிழிலும் முன்னணி நடிகையாக உயர இருக்கும் பூஜா ஹெக்டே இப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபிளவர் காஸ்ட்யூமில் மெழுகு சிலை போல ஜொலிக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X