4000 ஆயிரம் சதுர அடி.. மும்பையில் புது வீடு வாங்கிய பூஜா ஹெக்டே.. விலை என்ன தெரியுமா?

சென்னை: மிஸ்கின் இயக்கத்தில் உருவான முகமூடி திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிப்படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் தற்போது மும்பையில் பல கோடி மதிப்பிலான வீட்டை வாங்கி உள்ளார். தெலுங்கைத் தாண்டி பாலிவுட்டிலும் அவர் படங்களில் நடித்து வருவதால் இந்த முடிவை எடுத்துள்ளார்.

பூஜா ஹெக்டேவிற்கு முகமூடி திரைப்படம் சிறப்பாக அமையாததால், தெலுங்கு பக்கம் சென்றார். அங்கு அடுத்தடுத்த படத்தில் நடித்து வந்த நிலையில், விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்தார். இந்த படத்தின் மூலம் மீண்டும் தமிழ்ப் படங்களில் அடுத்தடுத்து கமிட்டாக முடியும் என்று எதிர்பார்த்து பூஜா ஹெக்டே காத்திருந்த நிலையில், படத்திற்கு நெகடிவ் கமெண்டுகள் வந்தால், தமிழில் இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாமல் போனது.

Beast movie heroine pooja hegde buys new house in mumbai

ராசி இல்லாத நடிகை: தமிழில் ராசி இல்லாத நடிகை என பெயர் எடுத்த பூஜா ஹெக்டே மீண்டும் தெலுங்கு பக்கம் சென்றார். தற்போது இவர் சார்மி கவுர், வம்ஷி பைடிப்பள்ளி மற்றும் பூரி ஜெகன்நாத் இணைந்து தயாரித்து வரும் ஜன கன மன என்ற படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த படத்தில், பூஜாவுக்கு மிரட்டலான ஒரு ஆக்ஷன் காட்சி இருப்பதாக கூறப்படுகிறது. அந்த அக்ஷன் காட்சிக்காக வெளிநாட்டு பயிற்சியாளரிடம் தீவிர ஆக்ஷன் பயிற்சி எடுத்து வருகிறார். இந்த பயிற்சியின் போது அவருக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதை அடுத்து அதற்காக அவர் சிகிச்சை எடுத்துக்கொண்டார்.

காதலில் விழுந்த பூஜா: இந்நிலையில், பூஜா ஹெக்டே மும்பையை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலித்து வருவதாகவும், இந்த விவகாரம் இருவரின் பெற்றோருக்கு தெரிந்ததை அடுத்து, இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், பூஜா ஹெக்டே விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. ஆனால் பூஜா ஹெக்டே தரப்பில் இருந்து இதுவரை எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை.

Beast movie heroine pooja hegde buys new house in mumbai

புது வீடு: இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே மும்பை பாந்த்ரா பகுதியில் கடற்கரையை பார்த்தபடி, ரூ. 45 கோடி மதிப்புள்ள ஆடம்பர் வீட்டை புதிதாக வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. 4000 சதுர அடி என்றும் இந்த வீட்டில் நீச்சல் குளம், ஜிம், தியேட்டர் என பல விஷயங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த வீட்டின் மதிப்பு மட்டும் ரூ 45 கோடி என கூறப்படுகிறது. நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த வீட்டில் விரைவில் குடியே இருக்கிறார் பூஜா.

தென்னிந்தியாவில் இருந்து பாலிவுட்டில் கலக்கி வரும் நடிகர்கள் சூர்யா, ஜோதிகா, இயக்குநர் அட்லி ஆகியோரும் மும்பையில் புது வீடு வாங்கி குடியேறி வரும் நிலையில், தற்போது பூஜா ஹெக்டேவும் மும்பையில் புது வீட்டை வாங்கி உள்ளார். இவர் நடித்து வரும் படங்கள் அனைத்து தோல்விப்படமாக இருக்கும் நிலையில், தனது சம்பளத்தை கணிசமாக குறைத்துக்கொண்ட இவர், எப்படி 45 கோடிக்கு மும்பையில் வீடு வாங்கினார் என நெட்டிசன்கள் குதர்க்கமாக கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X