அழகுச் சிலை தமன்னாவுக்கு பிறந்த நாள்.. ஹேப்பி பர்த்டே தமன்னா

சென்னை: தென்னிந்திய சினிமாவில் வெள்ளை நிற மெழுகு சிலை தான் தமன்னா. இவருக்கு பல நூறு ரசிகர் பட்டாளங்கள் உள்ளன.

தனது பதினைந்து வயதில் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானவர் தமன்னா.பின் சிறிது காலம் கழித்து 2005 ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் கால் பதித்தார் மற்றும் தமிழில் கேடி என்ற படம் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார் தமன்னா. இந்த இரண்டு படங்களும் சுமார் ஆகவே இருந்தது.

 beatutiful tamanna celebrates birth day

பின் இரண்டு மொழி ரசிகர்களுக்கு நன்கு அவரை அறிய வைத்த படம் தான் பாலாஜி சக்திவேலின் தமிழில் கல்லூரி மற்றும் தெலுங்கில் ஹாப்பி டேஸ். இப்படம் மிகவும் பேசப்பட்டது மற்றும் தமன்னாவின் நடிப்பு பிரபலமானது. இப்படத்திற்காக பிலிம்பேர் சிறந்த நடிகைக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

 beatutiful tamanna celebrates birth day

பின்னர் 2009 ஆம் ஆண்டு தமிழில் வெளியான கண்டேன் காதலை படத்திற்கு பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் அவரின் திரை வாழ்க்கை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. 2010 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் தளபதி ஆன இளைய தளபதி விஜய்யுடன் சுறா , ஜெயம் ரவியுடன் தில்லாலங்கடி போன்ற படங்களில் நடித்தார்.

 beatutiful tamanna celebrates birth day

இவ்விரண்டு படங்களும் சுமார் ஆகவே இவருக்கு அமைந்தது. அதே வருடம் கார்த்தி நடிப்பில் வெளியான பையா திரைப்படம் இவருக்கு வெற்றியை தேடிதந்தது. 2011 ஆம் ஆண்டு தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் ஆறு படங்களில் நடித்தார் தமன்னா. அனைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆக இரண்டு திரையுலகிலும் முன்னணி கதாநாயகி ஆனார் தமன்னா.பின் தல அஜீத் உடன் வீரம் படத்தில் நடித்தார் இப்படமும் இவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுதந்தது.

 beatutiful tamanna celebrates birth day

2015 ஆம் ஆண்டு வெளியாகி இந்தியா முழுவதும் பிரம்மாண்ட வெற்றி பெற்ற பாகுபலி படத்தின் முதல் பாகத்தில் நடித்தார். இப்படத்தின் முதல் பாகத்தில் அவந்திகா எனும் கதாபாத்திரம் இவருக்கு நல்ல கதாபாத்திரமாக அமைந்தது. இதனை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு தமிழில் தோழா, தர்மதுரை, தேவி படங்களில் நடித்து பிரபலமாகினார் தமன்னா. இதனை தொடர்ந்து தமிழில் அதிகம் படங்களில் நடிப்பதில்லை வருடத்திற்கு ஒரு படம் என்று தான் நடிக்கிறார் தமன்னா.

 beatutiful tamanna celebrates birth day

தேவி படங்களில் நடித்து பிரபலமாகினார் தமன்னா. இதனை தொடர்ந்து தமிழில் அதிகம் படங்களில் நடிப்பதில்லை வருடத்திற்கு ஒரு படம் என்று தான் நடிக்கிறார் தமன்னா.
தமன்னாவிற்கு தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழி சினிமாவில் ஏறுமுகம் தான். இன்று அவர் பிறந்த நாள் என்பதால் தமிழ் ரசிகர்கள் சமுக வலை தளங்களில் தமன்னா நீங்கள் தமிழில் இனி வரும் காலங்களில் நிறைய படங்கள் நடிக்க வேண்டும் என்று கருத்து
தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: tamanna தமன்னா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X