முகத்தில் மலர்ச்சி ரசிகருடன் செல்ஃபி.. விவாகரத்து கவலையிலிருந்து சிங்கப் பெண்ணாக மீண்டு வரும் சமந்தா

மும்பை : நடிகை சமந்தா மிகவும் தெளிவாக காணப்படுகிறார். விவாகரத்து ஏற்படுத்திய மன உளைச்சலில் இருந்து மிகவும் அழகாக வெளியே வந்துள்ளார். அடுத்தடுத்த பிராஜக்ட்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

நடிகை சமந்தா

நடிகை சமந்தா

நடிகை சமந்தா தமிழ், தெலுங்கில் மட்டுமில்லாமல் இந்தியிலும் தனது சினிமா பயணத்தை தொடர்ந்து வருகிறார். திருமணத்திற்கு முன்பும் பின்பும் சிறப்பான கதைக்களங்களில் நடித்துவந்த இவர், தற்போது தனது விவாகரத்து அறிவிப்புக்கு பின்பும் தொடர்ந்து பிசியான நடிகையாகவே இருந்து வருகிறார்.

ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நடிகை

ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நடிகை

10 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னை தொடர்ந்து முன்னணி கதாநாயகியாகவே வைத்துக் கொண்டுள்ளார். தன்னுடைய அழகு, கவர்ச்சி இதை தொடர்ந்து மெயின்டெயின் செய்து வருகிறார். தொடர்ந்து ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நடிகையாகவே இருந்து வருகிறார். முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடித்து வருகிறார்.

தமிழில் அடுத்தப்படம்

தமிழில் அடுத்தப்படம்

இவரது நடிப்பில் தமிழில் அடுத்ததாக காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வரும் ஏப்ரல் 28ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் இன்றைய தினம் நிறைவடைந்ததையடுத்து படத்தின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளன. நடிகை நயன்தாரா சமந்தாவிற்கு பரிசு கொடுத்து அசத்தியுள்ளார்.

இந்தியில் வெப் தொடரில் சமந்தா

இந்தியில் வெப் தொடரில் சமந்தா

தெலுங்கிலும் சமந்தாவின் சகுந்தலா உள்ளிட்ட அடுத்தடுத்தப் படங்கள் ரிலீசாக உள்ளன. இந்தப் படம் தமிழிலும் வெளியாகவுள்ளது. இந்தியிலும் வெப் தொடர்களில் நடித்து வருகிறார் சமந்தா. தொடர்ந்து தன்னை நடிப்பு, விளம்பரங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பிசியாக வைத்துக் கொண்டுள்ளார்.

விமானநிலையத்தில் சமந்தா

விமானநிலையத்தில் சமந்தா

இந்நிலையில் தற்போது மும்பை விமானநிலையத்தில் நடந்துவரும் சமந்தாவின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விமானநிலையத்தில் அவர் நடந்துவர, ரசிகர் ஒருவர் ஓடிவந்து செல்பி எடுக்கிறார். அதற்கு அழகாக போஸ் கொடுக்கும் சமந்தா தொடர்ந்து நடந்து செல்கிறார். அழகான ஜீன்ஸ், டிசர்ட்டில் அவரை இந்த வீடியோவில் காண முடிகிறது.

மனஉளைச்சலை ஏற்படுத்திய பிரிவு

மனஉளைச்சலை ஏற்படுத்திய பிரிவு

நாக சைத்தன்யாவுடனான 4 ஆண்டு திருமண வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாகவே காணப்பட்டார் சமந்தா. அதன் முறிவு குறித்த அறிவிப்பு அவருக்கு மிகுந்த மன உளைச்சலை கொடுத்தது உண்மை. அதிலிருந்து மீண்டு வர முடியாமல் மற்றவர்களின் குற்றச்சாட்டிற்கும் ஆளானார் சமந்தா.

ஆன்மீக சுற்றுப்பயணம்

ஆன்மீக சுற்றுப்பயணம்

இதிலிருந்து மீள்வதற்கு அவருக்கு அவருடைய நண்பர்கள் மற்றும் ஆன்மீக சுற்றுப்பயணங்கள் மிகுந்த உதவியாய் இருந்தன. காலம் எல்லாவற்றையும் மாற்றும் என்பது தற்போது சமந்தா வாழ்க்கையிலும் உண்மையாக மாறியுள்ளது. தற்போது மிகுந்த தெளிவுடன் காணப்படுகிறார் சமந்தா.

Recommended Video

அரபிக்குத்து பாட்டுக்கு ஆட்டம் போட்ட சமந்தா.. அட.. இவங்களையே ஹீரோயினா போட்டு இருக்கலாம்!
அடுத்தடுத்த பட அறிவிப்புகள்

அடுத்தடுத்த பட அறிவிப்புகள்

தன்னுடைய அடுத்தடுத்த படங்களின் அறிவிப்புகளுடன் அவர் தன்னுடைய கேரியரை சிறப்பாக எதிர்கொண்டு வருகிறார். அவரது தன்னம்பிக்கையும் அழகும் அதிகமாகியுள்ளது. இதையே விமானநிலையத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ள இந்த வீடியோ காட்டுகிறது. மிகவும் அழகாக நடந்துவரும் அவர் ரசிகரின் கோரிக்கையை ஏற்று செல்பி எடுத்தும் மகிழ்ந்துள்ளார். சிங்கப்பெண்ணாய் அவரை காண முடிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X