»   »  மந்த்ராவின் தந்த்ரா !

மந்த்ராவின் தந்த்ரா !

Subscribe to Oneindia Tamil

உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியின்போது சோனி டிவியில் தொகுப்பாளினியாக தாராள மனதுடன் வந்து ரசிகர்களைக்கவர்ந்த மந்த்ரா பேடி தமிழில் மன்மதன் உள்ளிட்ட ஓரிரு படங்களில் நடித்து வருகிறார்.

டிவியில் தோன்றியதுபோலவே, படப்பிடிப்புத் தளங்களிலும் தாராளமாகவே இருக்கிறார் மந்த்ரா.

தன்னுடன் நடிக்கும் ஹீரோ உள்ளிட்ட முக்கிய நடிகர்களுடன் ஒட்டி, உரசியபடி தான் உட்காருகிறாராம். அவர்களது கையைப்பிடித்துக் கொண்டோ அல்லது தோளை பிடித்துக் கொண்டோ பேசும் மந்த்ரா திடீர், திடீர் என்று கன்னத்தில் இச்சா தரவும்தயங்குவதில்லை.

இதெல்லாம் மும்பை திரையுலகில் சர்வ சாதாரணம் என்றாலும், கோலிவுட் என்னவோ, இந்த விஷயத்தில் இன்னும் கட்டுப்பெட்டிதான் (சூட்டிங் ஸ்பாட்டில் மட்டும் தான்...).

ஆனால், பாலிவுட்டில் சூட்டிங் ஸ்பாட், பொது இடம் என்ற கணக்கு வழக்கெல்லாம்கிடையாது. கொஞ்சம் ஓவராகவே தான் நடந்து கொள்வார்கள்.

அதே தந்திரத்தை கோலிவுட்டிலும் கையாள ஆரம்பித்திருக்கிறார் மந்த்ரா. மந்த்ராவுக்கு முன்பு போல இப்போது இந்தியில்மார்க்கெட் இல்லை. எனவேதான் தமிழ் திரையுலகில் கொஞ்ச காலம் நின்று விளையாட களம் தயார் செய்ய முயல்வதாகசொல்கிறார்கள்.

இதனால் சூட்டிங் ஸ்பாட்டில் வஞ்சனையில்லாமல் நடந்து கொள்ளும் மந்த்ராவின் இந்த தந்திரம் கோலிவுட்டிலும் பலஜொள்ளர்களுக்கு ரொம்பவே பிடித்துப் போய் விட்டது.

இதனால் மன்மதன் படம் முடிவதற்குள்ளாகவே, அவரை தங்களதுபடங்களில் புக் செய்யும் சாக்கில், சும்மா அவரை சந்திக்க ஆர்வத்துடன் தொடர்பு கொண்டு வருகிறார்கள்.

அவர்களது ஆர்வத்தை நன்றாகவே புரிந்து வைத்துள்ள மந்த்ரா, அவர்களை ஏமாற்றாமல் கவனித்து அனுப்பி வைக்கிறார்.

மந்த்ராவிற்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது !

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil