நடிகை சனாகானுக்கு பீடி பாக்கெட் பார்சல்!

சிம்புவுடன் சிலம்பாட்டம் படத்தில் அறிமுகமானவர் நடிகை சனாகான். சமீபத்தில் ரிலீசான பிரகாஷ்ராஜின் 'பயணம் படத்திலும் நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் பிரஸ்மீட்டில் பெண்கள் புகைப்பிடிப்பதை நியாயப்படுத்துவது போல் சனாகான் கருத்து தெரிவித்திருந்தார்.
புகைப்பிடிப்பதால் தப்பில்லை. அதுவும் பெண்கள் புகைப்பிடித்தால் அவர்களின் உடல் ஸ்லிம்மாகும். எனவே ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு சிகரெட் பிடிக்கலாம் என அவர் கூறியிருந்தார்.
இதனை இந்து மக்கள் கட்சி கண்டித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநில தலைவர் சி.ஆர்.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெண்கள் தினமும் மூன்று சிகரெட் பிடிப்பது தப்பில்லை என்றும் புகை பழக்கத்தால் உடல் மெலிதாகும் என்றும் சனாகான் கூறியுள்ளார்.
சிகரெட்டில் வரும் வரி வருமானம் பல மடங்கு தொகையை அரசு புற்று நோயை ஒழிக்க செலவிடுகிறது. சிகரெட்டால் நிகழும் புற்று நோய் சாவுகள் பெருகி வருகின்றன. இந்த பழக்கத்தை ஒழிக்க தன்னார்வ அமைப்புகளும் அரசாங்கங்களும் கடும் முயற்சிகள் எடுத்து வருகின்றன.
இந்த நிலையில் சினிமாவால் பாப்புலரான சனாகான் புகை பிடிக்கும் பழக்கத்துக்கு ஆதரவாக பேசி இருப்பது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற விஷயங்களை வெளிப்படையாக பேசுவதை தவிர்க்க வேண்டும்.
சனாகானுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அவருக்கு சிகரெட் மற்றும் பீடி பாக்கெட்டுகளை அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளோம்."
-இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications











