எனக்கு பேய் நம்பிக்கை உண்டு: டாப்ஸியின் திகில் ஆர்வம்
சென்னை: வெள்ளாவி வைத்து வெளுத்தார்களோ என்ற சந்தேகத்தை ரசிகர்கள் மனதில் தோன்ற வைத்து தமிழ் சினிமாவில் அறிமுகமான டாப்சிக்கு பேய் நம்பிக்கை உண்டாம்.
ஆடுகளத்திற்குப் பிறகு தமிழ் படங்கள் எதுவும் டாப்ஸிக்கு அவ்வளவாக கை கொடுக்காத நிலையில் தெலுங்கு பக்கம் போய் விட்டார் டாப்சி.
தற்போது, லாரன்ஸ்ன் முனி-3 ல் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறதாம். திகில் காட்சிகள் எப்போது படமாக்கப் படும் என்ற ஆர்வத்தில் இருக்கிறாராம் டாப்சி.
இது குறித்து மேலும் அவர் கூறியதாவது....

பேய் பயம்...
கடவுள் மீது எனக்கு நம்பிக்கை உண்டு. எந்தளவுக்கு கடவுளை நம்புகிறேனோ அந்தளவுக்கு ஆவி, பேய், பிசாசு போன்றவற்றிலும் நம்பிக்கை இருக்கிறது.

ரசித்து நடிக்கிறேன்...
லாரன்ஸ் இயக்கும் ‘கங்கா‘ (முனி பார்ட் 3)வில் நடித்து வருகிறேன். சென்னையில் இதன் ஷூட்டிங் நல்லமுறையில் நடந்து வருகிறது. ஒவ்வொரு காட்சியையும் அனுபவித்து நடிக்கிறேன்.

திகிலாத்தான் இருக்கிறது...
இன்னும் திகில் காட்சிகள் ஷூட்டிங் தொடங்கவில்லை. அது எப்போது தொடங்கும் என்று ஆவலாக காத்திருக்கிறேன். திகில் படங்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் முதன்முறையாக அக்காட்சிகளில் நடிக்கப்போகிறேன் என்று எண்ணும்போது கொஞ்சம் திகிலாகத்தான் இருக்கிறது.

மணாலியில் ஷூட்டிங்...
சமீபத்தில் அஜீத்துடன் குலுமணாலியில் நடந்த ஷூட்டிங்கில் பங்கேற்று திரும்பினேன். இதுதவிர தெலுங்கில் ‘சாசனம்‘ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறேன் என இவ்வாறு டாப்சி கூறினார்.


Click it and Unblock the Notifications











