ப்பா.. என்ன ஒரு ஹாட்னஸ்.. மினி கிராப் டாப்பில் கலக்கும் பிரபல நடிகை.. வாய் பிளக்கும் ஃபேன்ஸ்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல டிவி நடிகையும் மாடலுமான பெல்லா ஹதித் மினி கிராப் டாப் அணிந்து இருக்கும் போட்டோ ஒன்று வெளியாகி வேற லெவலில் வைரலாகி வருகிறது.
Recommended Video
பிரபல அமெரிக்க மாடல் அழகியான இவர், கடந்த 2016ம் ஆண்டின் சிறந்த மாடல் அழகியாக தேர்வு செய்யப்பட்டவர்.
இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 32 மில்லியன் ரசிகர்கள் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.

முழுப்பெயர்
இசபெல்லா கைர் ஹதித் எனும் இயற்பெயரை பெல்லா ஹதித் என சுருக்கமாக மாற்றிக் கொண்டு ஃபேஷன் உலகில் வலம் வருகிறார் இந்த சூப்பர் மாடல். 1996ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி பிறந்த இவருக்கு தற்போது 23 வயதாகிறது. அமெரிக்காவின் வாசிங்டனில் பிறந்த இவர் கீப்பிங் அப் வித் கர்தாஷியன் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு பிரபலமானார்.

நிர்வாணமாக
பிரபல மாடல் அழகியான இவர், வி மேகஸினின் காலண்டர் போட்டோஷூட்டுக்காக முழு நிர்வாணமாக போஸ் கொடுத்து சர்வதேச ரசிகர்களை திக்குமுக்காட செய்தார். உடைகளை அணியாமல், கையில் பிடித்தபடி இவர் கொடுத்துள்ள போட்டோஷூட் ஃபேஷன் விரும்பிகளை வெகுவாக கவர்ந்தது. கிட்டத்தட்ட ஒரு மில்லியன் லைக்குகள் அந்த புகைப்படத்திற்கு கிடைத்தன.

ரியாலிட்டி ஷோ
அமெரிக்காவில் மிகவும் பிரபலம் அடைந்த Keeping Up With the Kardashians, Real Housewives of Beverly Hills, Making a model with Holanda Hadid உள்ளிட்ட ரியாலிட்டி ஷோ தொடர்களில் நடித்து அமெரிக்க ரசிகர்கள் மத்தியில் பிரபல டிவி நடிகையாக வலம் வந்தவர். பல ஷார்ட் ஃபிலிம்களிலும் நடித்து சர்வதேச ரசிகர்களின் பாராட்டுக்களை அள்ளி உள்ளார்.

மினி கிராப் டாப்
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ஷாப்பிங் செல்ல வெளியே கிளம்பிய நடிகை பெல்லா ஹதித், முகத்தில் மாஸ்க் மற்றும் கூலர்ஸ் அணிந்திருந்தார். சர்வ சாதாரணமாக கடை வீதிக்கு செல்லும் போதும், பலரது கவனத்தை ஈர்க்கும் விதமாக அவர் அணிந்திருந்த மினி கிராப் டாப் உடை அனைவரின் கவனத்தையும் அணிச்சையாய் ஈர்த்தது.

வேற லெவல் வைரல்
பெல்லா ஹதித், படுகவர்ச்சியான உடையில் வெளியே தோன்றிய நிலையில், க்ளிக் செய்யப்பட்ட அவரது புகைப்படங்கள் சர்வதேச அளவில் வேற லெவலில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் டென்னிஸ் விளையாடும் போது மீடியாக்கள் கண்ணில் பட்ட அவர், தற்போது ஷாப்பிங் செய்யும் போது தென்பட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











