»   »  பிரனீதா, பாருல் யாதவ்... "பிசினஸ் வுமனாக"யாக மாறி வரும் பெங்களூரு நடிகைகள்!

பிரனீதா, பாருல் யாதவ்... "பிசினஸ் வுமனாக"யாக மாறி வரும் பெங்களூரு நடிகைகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர்கள்தான் சைட் பை சைடாக பிசினஸ் செய்வார்களா.. நடிகைகள் செய்யக் கூடாதா. இதோ புறப்பட்டு விட்டனர் சில பெங்களூர் நடிகைகள் புதிய பிசினஸ் வுமன்களாக.

தமிழ் தெலுங்கு, கன்னடத்தில் பல படங்களில் நடித்துள்ள பிரனீதா சுபாஷ் அதில் ஒருவர். இவர் இப்போது பெங்களூரில் உள்ள ஹோட்டலில் பங்குதாரர் ஆகியுள்ளார்.

பெங்களூரிலேயே மிகவும் காஸ்ட்லியான பகுதிகளில் ஒன்றான லேவல்லி சாலையில் உள்ள பூட்லெக்கர் என்ற ஹோட்டலில் சில பங்குகளை இவர் வாங்கி அதில் இணைந்துள்ளார்.

சகுணி நாயகி..

சகுணி நாயகி..

சகுணி படம் மூலம் தழில் நடிக்க வந்தவர் பிரனீதா. மாஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் கூட ஆந்தரிராவில் சாலை விபத்தில் சிக்கினார்.

தொடர்ந்து நடிப்பேன்..

தொடர்ந்து நடிப்பேன்..

ஹோட்டல் தொழிலில் இறங்கி விட்டாலும் கூட நடிப்பை கைவிட மாட்டாராம் பிரனீதா. தொடர்ந்து நடிப்பாராம். பல படங்கள் கைவசம் உள்ளதாம்.

எனக்குள் ஒரு வியாபாரி...

எனக்குள் ஒரு வியாபாரி...

எனக்குள் உள்ள தொழிலதிபரை வெளிக் கொண்டு வரும் முயற்சிதான் இது. மற்றபடி முழுமையாக இதில் இப்போதைக்கு இறங்க மாட்டேன். நடிப்பையும் தொடருவேன். சிறிய அளவில் முதலீடுகளைத் தொடங்கியுள்ளேன்' என்கிறார் இவர்.

ஹைதராபாத்- சென்னையிலும்...

ஹைதராபாத்- சென்னையிலும்...

சென்னை, ஹைதராபாத்திலும் பூட்லெக்கர் ஹோட்டலின் கிளைகளை திறக்கத் திட்டமிட்டுள்ளாராம் பிரனீதா. படிப்படியாக கிளைகள் திறக்கப்படுமாம்.

பாருல் யாதவ்...

பாருல் யாதவ்...

அடுத்து பாருல் யாதவ். இவர் ராம் கோபால் வர்மாவின் கில்லிங் வீரப்பன் படத்தில் நடித்தவர். இப்போது இவர் இன்டீரியர் டிசைனராக மாறி விட்டார். இவர் ஆரம்பத்திலிருந்தே இன்டீரியர் டிசைனர்தான். இடையில்தான் சினிமாவுக்கு வந்தார். தற்போது இந்தத் தொழிலை முழு அளவில் செய்யக் களம் இறங்கி விட்டாராம்.

நடிக்கவும் செ்யவேன்..

நடிக்கவும் செ்யவேன்..

அதேசமயம், நடிப்பையும் விட மனதில்லையாம். எனவே அவ்வப்போது நல்ல ரோல்கள் கிடைத்தால் தொடர்ந்து நடிக்கவும் செய்வேன் என்று கூறியுள்ளார் பாருல் யாதவ்.

பிரபலங்களுக்கு..

பிரபலங்களுக்கு..

பாருல் நடத்தி வரும் ஏஸ் டிசைன்ஸ் நிறுவனம் பிரபலங்களுக்கு நிறைய டிசைன் செய்து கொடுத்துள்ளதாம். பாடகர் மிகா, நடிகை டிஸ்கா சோப்ரா ஆகியோர் இதில் அடக்கம்.

கிரிதி கர்பண்டா..

கிரிதி கர்பண்டா..

அதேபோல இன்னொரு நடிகை பெங்களூரைச் சேர்ந்த கிரிதி கர்பண்டா. இவர் இந்தியில் வெளியான ராஸ் ரிபூட்டட்ட படம் மூலம் நடிகையவர். தற்போது கிரிதி என்ற பெயரில் ஒரு டிசைனர் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

ஹோட்டலுக்கு வருகிறார்...

ஹோட்டலுக்கு வருகிறார்...

தற்போது இவர் ஹோட்டல் பிசினஸிலும் இறங்கவுள்ளார். அதாவது மொபைல் ஹோட்டல் போல நடத்தப் போகிறாராம். பகுதிக்கேற்ற உணவுகளை அது வழங்குமாம்.

முன்னோடிகள்..

முன்னோடிகள்..

இதற்கு முன்பு நடிகை ரம்யா அரசியல்வாதியாக மாறினார். நடிகை தீபிகா காமையா டிசைனர் ஸ்டோரை தொடங்கினார். ஹர்சிகா பூனச்சா, பிரஜ்னா ஆகியோர் ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனங்களை நடத்தி வருகின்ற் என்பது நினைவிருக்கலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    From meals-on-wheels to high-end designing for celebrity homes, the actresses seem to have started their ventures on the right note. Multilingual actress Pranita Subhash, who has acted in blockbuster Telugu, Kannada and Tamil movies, has picked stakes in Bootlegger, a premium upmarket restaurant on Lavelle Road, one of the costliest localities of the IT capital of the nation.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more