சதாவின் மிரட்டல்!
ஹைதராபாத்: வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் சதா தற்போது தெலுங்கில் த்ரில்லர் படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
தமிழில் ஜெயம் படத்தில் அறிமுகமானவர் சதா. அதன் பிறகு அவர் சங்கர் இயக்கத்தில் விக்ரமுடன் அன்னியன் படத்தில் நடித்தார். மேலும் பல படங்களிலும் நடித்தார். சதா அழகாக இருந்தாலும் வாய்ப்பு என்னவோ வர மாட்டேன் என்று அடம்பிடிக்க ஆரம்பித்துவிட்டது.
இதையடுத்து அவர் கன்னடத்து பக்கம் போய் நடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் அவர் தச திரிகிந்தி என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சதா ரசிகர்களை பயமுறுத்தப் போகிறார்.

மிரட்டல் சதா
சிவாஜி என்பவருடன் நடிக்கும் சதா ரசிகர்களை மிரள வைக்கப் போகிறார்.

பயமுறுத்தப் போகும் சதா
அழகில் மயக்கிய சதா தற்போது ரசிகர்கள் பயமுறுத்தவிருக்கிறார்.

அம்மாடி சதாவா
இந்த புகைப்படத்தைப் பார்த்தால் பயமாத் தான் இருக்கு.

மே மாதம் ரிலீஸ்
படம் அடுத்த மாதம் ரிலீஸாகிறது என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











