சிவகார்த்திகேயன் கையில் அரிவாள்.. பாக்யஸ்ரீ போர்ஸ் கையில் மயிலிறகு.. சேயோன் பட்டையை கிளப்புதே

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் சேயோன். தாய் கிழவி கதை சொன்னபோதே சிவக்குமார் மீது அதீத நம்பிக்கை வைத்து இந்தப் படத்தில் கமிட்டாகியிருக்கிறார் சிவா. படத்தின் கிளிம்ப்ஸ் இரண்டு மாதங்களுக்கு முன்பு ரிலீஸாகி சக்கைப்போடு போட்டது. இதில் ஹீரோயினாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இந்நிலையில் அவரை வாழ்த்தும் விதமாக புது போஸ்டரை வெளியிட்டிருக்கிறது படக்குழு.

தாய் கிழவி திரைப்படம் கோலிவுட்டில் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அதனை சிவகார்த்திகேயன் தயாரிக்க சிவக்குமார் முருகேசன் இயக்கியிருந்தார். பெண்களுக்கான படங்கள் பட்டியலில் தாராளமாக இந்தப் படத்தை டாப் 3 இடத்துக்குள் வைக்கலாம் என்று ரசிகர்கள் குதூகலித்தார்கள். இந்தப் படத்தின் கதையை தன்னிடம் சொன்னபோது சிவக்குமாரிடம் இம்ப்ரெஸ் ஆகி வேறு லைனை சிவா கேட்க; அது பிடித்தும்விட சேயோன் திரைப்படத்தில் கமிட்டாகிவிட்டார். இரண்டாவது படமே பெரிய ஹீரோவை இயக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார் சிவக்குமார்.

Bhagyashri Borse s Birthday Poster from Sivakarthikeyan s Seyon Goes Viral on Social Media
Photo Credit:

சூப்பர் க்ளிம்ப்ஸ்: படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்துவருகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் ஹீரோயினாக கமிட்டாகியிருக்கிறார். கடந்த பிப்ரவரி மாதத்தில் சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு படத்திலிருந்து க்ளிம்ப்ஸ் காட்சிகளும் வெளியாகின. அந்த வீடியோ எல்லோரிடமும் வரவேற்பை பெற்று; எஸ்கேவுக்கு கண்டிப்பாக மெகா ஹிட் கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் விதைத்திருக்கிறது.

Also Read
சிவகார்த்திகேயன்தான் சி.எம்.. பிரதீப் ரங்கநாதனும் லிஸ்ட்டில் இருக்காரு.. பிரபலம் அதிரடி
சிவகார்த்திகேயன்தான் சி.எம்.. பிரதீப் ரங்கநாதனும் லிஸ்ட்டில் இருக்காரு.. பிரபலம் அதிரடி

சென்சேஷனல் ஹீரோயின்: இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கமாக எகிற முக்கிய காரணங்களில் பாக்யஸ்ரீ போர்ஸ் இருக்கிறார். ருக்மிணி வசந்த் போன்று இப்போதைக்கு சென்சேஷனலாக இருப்பவர் பாக்யஸ்ரீ. துல்கர் சல்மானுக்கு ஜோடியாக அவர் நடித்திருந்த காந்தா திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறாவிட்டாலும்; பாக்யஸ்ரீயின் நடிப்புக்கு அப்ளாஸ் அவ்வளவு கிடைத்தது. அவரது நடிப்பில் சாவித்திரியை காண முடிகிறது என்றும்; கண்டிப்பாக கோலிவுட்டில் பெரிய ரவுண்டு வருவார் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது.

நடக்குமா அது?: அந்த கணிப்பு சாத்தியமாவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவே தெரிகிறது. அழகும், திறமையும் சேர்ந்திருக்கும் நடிகைகள் குறைந்தபட்சம் 10 வருடங்களாவது கோலிவுட்டை ரூல் செய்வார்கள். அதற்கான அத்தனையும் இவருக்கும் இருக்கிறது. சேயோன் படமும் அவருக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்திருக்கும். ஏனெனில் விஜய் சினிமாவிலிருந்து ஒதுங்கி முதலமைச்சராகிவிட்டார். அஜித்தின் முழு கவனமும் இப்போது சினிமாவில் மட்டும் இல்லை கார் ரேஸிலும் இருக்கிறது. எனவே அடுத்ததாக பெரிய கமர்ஷியல் ஹீரோவாக சிவா மாறிவிட்டார் என்றுதான் அவரது ரசிகர்கள் சொல்கிறார்கள். அப்படி பார்க்கையில் எஸ்கே படம் பாக்யஸ்ரீக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றுதான்.

புதிய போஸ்டர்: இந்நிலையில் இன்று பாக்யஸ்ரீ போர்ஸ் தனது 26ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக சேயோன் படக்குழு அவருக்கென போஸ்டரை வெளியிட்டிருக்கிறது. அதில் கையில் மயிலறகுடன் காட்சி தருகிறார் அவர். இதற்கு முன்னதாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சிவகார்த்திகேயன் கைகளில் அரிவாள் இருந்தது குறிப்பிடத்தக்கது. மயிலறகுடன் இருக்கும் இந்த போஸ்டர் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X