'மேக்சிமம்' அழகை காட்ட பிகினியில் வரும் பைரவி
மும்பை: 'தி சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ்' படத்தில் பாலிவுட் நடிகை பைரவி கோஸ்வாமி ரொம்ப சின்ன பிகினியில் வருகிறார்.
பாலிவுட் நடிகைகள் சேலை, மிடி, சுடிதார் அணிந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. தற்போது அவர்கள் உடலை சிக்கென்று வைத்துக் கொண்டு குட்டி, குட்டியாக ஆடை அணிந்து வருகின்றனர். படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் கூட. மேலே குட்டியான டாப்ஸும், முக்கால் வாசி கால் தெரியும் அளவுக்கு மிகவும் குட்டியான ஸ்கர்டும் அணிந்து வருகின்றனர்.
இல்லை என்றால் மேல் அழகும், கால் அழகும் அப்பட்டமாகத் தெரியும் அளவுக்கு குட்டி கவுன் அணிகிறார்கள். அங்கங்களை மறைக்கும் ஆடைகள் அவர்களுக்கு பிடிப்பதே இல்லை போன்று. இந்நிலையில் ஹாரூன் ராஷித் இயக்கத்தில் சதீஷ் ரெட்டி தயாரிக்கும் தி சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ் படத்தில் நடிக்கும் பைரவி கோஸ்வாமி தனது அழகை எவ்வளவு காட்ட முடியுமோ அந்த அளவுக்கு ரசிகர்களுக்கு காட்ட முடிவு செய்துள்ளார்.
இந்த படத்தில் பைரவி தவிர்த்து கவர்ச்சிக் கன்னிகள் வீணா மாலிக், பூஜா மிஸ்ரா ஆகியோரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பைரவி கோஸ்வாமி
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பைரவி கோஸ்வாமி இங்கிலாந்தில் வளர்ந்தவர். தாய் நாட்டுக்கு திரும்பிய அவர் மாடலிங் செய்வதோடு, பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது அவர் தி சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பைரவி அழகிய கால்களுக்கு பெயர் போனவர்.

பிகினியில் பைரவி
பாலிவுட்டில் பிகினி காட்சி சர்வ சாதாரணமாகிவிட்டது. இந்நிலையில் தி சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ் படத்தில் பைரவி பிகினியில் வருகிறாராம். தனக்கு அழகான கால்கள் இருக்கின்றன என்று பெருமைப்படும் அவர் அதை பிகினி காட்சியில் முடிந்த அளவுக்கு காண்பிக்கவிருக்கிறார்.

அழகை காட்ட விரும்புகிறேன்
எனக்கு மிகவும் அழகான உடல் உள்ளது. அதை ரசிகர்களுக்கு காண்பிக்க விரும்புகிறேன் என்கிறார் பைரவி.

பைரவியின் முகத்தைக் காட்டிலும் கால்கள் அழகு?
பைரவியின் கால்கள் நீளமாகவும், அழகாகவும் உள்ளன. அதனால் அவரது முகத்தைப் பார்ப்பவர்களை விட கால்களை ரசிப்பவர்கள் தான் அதிகம். பாலிவுட் நடிகைகளில் பைரவிக்கு அழகான கால்களும், உடம்பும் உள்ளது.


Click it and Unblock the Notifications











