கவர்ச்சியில் பரபரக்கும் பைரவி கோஸ்வாமி.. 'சிட்டி'யில் பரபரப்பு!
மும்பை: ஏற்கனவே கவர்ச்சி லட்டுகளின் திணிப்பாலும், குவிப்பாலும் திக்குமுக்காடிக் கொண்டிருக்கும் த சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ் படத்தில் மேலும் ஒரு கவர்ச்சி கொடிமுந்திரியைக் கோர்த்து விட்டுள்ளனர். அவர்தான் பைரவி கோஸ்வாமி.
இசை என் வாழ்க்கை, அதுதான் என் மூச்சு என்று கூறி வருபவர் பைரவி கோஸ்வாமி, போல்டு அன்டு ப்யூட்டிபுல் என்று கவர்ச்சிக்குப் பஞ்சமில்லாமல் இருக்கும் கோஸ்வாமி ஏற்கனவே மாடலாக இருந்தபோதும், இந்திப் படங்களில் நடித்த போதும் கவர்ச்சியை கலந்து கட்டி அடித்தவர்.
ஏற்கனவே பீஜா, மை ஃப்ரண்ட் கணேசா படத்தில் கவர்ச்சியில் கலக்கியவர்தான் பைரவி. பட்டி ஆன் சுட்டி படத்திலும் கலக்கியவர். இப்போது சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ் படத்தில் என்ன செய்யப்போகிறார் என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

சதீஷ் ரெட்டி படம்...
தமிழ் சினிமாவில் எப்படி பாபு கணேஷ் அந்த சாதனை, இந்த சாதனை என்று பயமுறுத்தி கலக்குகிறாரோ அதேபோலத்தான் இந்த சதீஷ் ரெட்டியும். இவரது படம்தான் த சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ். வீணா மாலிக் முக்கிய ரோலில் நடிக்கிறார்.

கவர்ச்சியை வைத்து கலங்கடிக்கும் ரெட்டி
இப்படத்தில் கவர்ச்சிக்கே முக்கியப் பாத்திரம் தரப்படுவதாக தெரிகிறது. காரணம், வீணா மாலிக் உள்பட பல கவர்ச்சி நடிகைகளை அடுத்தடுத்து புக் செய்து கொண்டிருக்கிறார் தயாரிப்பாளரான ரெட்டியும், இயக்குநரான ஹாரூன் ரஷீத்தும்.

லேட்டஸ்ட் ரசகுல்லா பைரவி கோஸ்வாமி
அந்த வரிசையில் லேட்டஸ்டாக வந்துள்ளார் பைரவி கோஸ்வாமி. இவரது பெயரைச் சொன்னாலே புல்லரித்துப் போகும். அப்படி ஒரு கவர்ச்சிக்குச் சொந்தக்காரப் பெண்ணாம் இவர்.

செக்ஸி போஸிங் .. பிகினி டான்ஸிங்
த சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ் படத்தில் இப்போது பைரவியையும் சேர்த்து விட்டனர். இப்படத்தில் அவர் செக்ஸியான போஸ்கள், பிகினி உடை நடனங்கள் என தனது அழகை அள்ளிக் கொட்டப் போகிறாராம்.

நான் ரொம்ப போல்டு, மாமே...!
பைரவி கவர்ச்சியில் மட்டுமல்லாமல் பேச்சிலும் கூட செம தில்லாகத்தான் இருக்கிறார். அவர் கூறுகையில், நான் ரொம்ப போல்டானா ஆள். எனவே போல்டான சீன்களில் நடிக்க நான் தயங்கியதே கிடையாது. ரசிகர்களை மகிழ்விப்பது மட்டுமே எனது ஒரே வேலை. எதைக் காட்டினால் ரசிகர்கள் மகிழ்வார்களோ அதைக் காட்ட நான் தயங்கவே மாட்டேன்.

இசைக்கு நான் அடிமை
எனக்கு இசை என்றால் கொள்ளைப் பிரியம். இசைக்கு அடிமை நான். இசை இல்லாமல் இருக்க முடியாது. அதுதான் எனது வாழ்க்கையும் கூட என்றார் பைரவி.

கவர்ச்சி புதிதல்ல
பைரவிக்கு கவர்ச்சி புதிய விஷயமே இல்லை. மிஸ்டர் பட்டி ஆன் சுட்டி என்ற படத்தில் கவர்ச்சியில் ரசிகர்களை நனைய விட்டிருந்தார் பைரவி. அப்படத்தில் அனுபம் கெரும், அமிதாப் பச்சனும் நடித்திருந்தனர்.
என்னென்ன பண்ணத் திட்டமிட்டிருக்கிறாரோ பைரவி...!


Click it and Unblock the Notifications











