»   »  தொந்தி பானு!

தொந்தி பானு!

Subscribe to Oneindia Tamil

தனது தொப்பை வயிற்றை பலரும் கேலி செய்து அட்வைஸ் செய்து வருவதால் தாமிரபரணி நாயகி பானு விசனத்தில் உள்ளார்.

கேரளத்து சீவல் பானு நடித்து அறிமுகமான படம் தாமிரபரணி. ஹிட் பட வரிசையில் தாமிரபரணி சேர்ந்து, வசூலை அள்ளி வருவதால் படயூனிட்டே படு சந்தோஷமாக இருக்கிறது.

பானுவுக்கும் இதில் சந்தோஷம்தான். ஆனால் சந்தோஷத்தை முழுசாக கொண்டாட முடியாத அளவுக்கு அவரது தொப்பை பெரும் இடையூறாகவந்து விட்டது.

பானுவின் நடிப்பையும், பாடல்களில் அவர் போட்டுள்ள ஆட்டத்தையும் பாராட்டும் அனைவரும், போனஸாக பானுவின் தொப்பையையும் சுட்டிக்காட்டுகிறார்களாம்.

தொப்பையை சரி செய், பாடல்களில் உனது ஆட்டத்தை விட தொப்பையின் ஆட்டம்தான் படு அட்டகாசமாக இருக்கிறது என்று அட்வைஸ்செய்வதால் விசனமாக இருக்கிறார் பானு.

இதையடுத்து டயட்டில் குதித்துள்ளார் பானு. தொப்பையைக் குறைக்க என்னவெல்லாம் உடற்பயிற்சி இருக்கிறதோ அதையெல்லாம் செய்யஆரம்பித்துள்ளாராம். அத்தோடு பெல்ட் கட்டி தொப்பையைக் கட்டுக்குள் கொண்டு வர முடியுமா என்ற பாசிபிலிட்டியையும் யோசித்துவருகிறாராம்.

தமிழ் சினிமாவில் தொப்பை நாயகிகள் பட்டியல் கொஞ்சம் நீளமானதுதான். சந்தியா ஒரு தொப்பை பார்ட்டிதான். ஜோதிகா கூட முன்புதொப்பையுடன் தான் இருந்தார். பிறகு குறைத்து விட்டார்.

தொப்பை நாயிககள் வரிசையில் புதிதாக சேர்ந்துள்ள பானு, விரைவில் தொந்தியைக் குறைத்து, முந்தி விடுவார் என்று நம்பலாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil