»   »  பானுவுக்கு ஒரு பரீட்சை!

பானுவுக்கு ஒரு பரீட்சை!

Subscribe to Oneindia Tamil

பரீட்சை பீதியில் இருக்கிறாராம் பானு.

கேரளத்து புதுச் சிட்டு, பருவ மொட்டு பானு, தாமிரபரணிக்குப் பிறகு தமிழ் சினிமாவின் பிசி நாயகிகளில் ஒருவராக மாறி விட்டார். பல படங்கள்பரணி பாடி பானுவைத் தேடி ஓடி வருகிறதாம்.

ஆனால் இப்போதைக்கு அம்மணி தமிழ்ப் படம் எதிலும் புதிதாக புக் ஆகவில்லையாம். மலையாளத்தில் கோல் என்ற படத்தில் மட்டுமே நடித்துக்கொண்டிருக்கிறார்.

தமிழ்ப் படங்களில் நடிக்க மல்லுவுட் மங்கைகள் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும்போது, மறுப்பது ஏனோ என்று பானுவிடம் கேட்டோம். அது வேறஒண்ணும் இல்லை சேட்டா. இப்போது கமல் சார் (இவர் மலையாளத்து இயக்குநர்) இயக்கத்தில் கோல் படத்தில் நடிக்கிறேன்.

அப்புறம் திலீப் சார் ஜோடியாக இன்னொரு மலையாளப் படத்திலும் புக் ஆகியுள்ளேன். தமிழிலும் நிறைய வாய்ப்புகள் வருகிறது. எஸ்.ஜே.சூர்யாசார் படத்தில் நடிக்க கேட்டுள்ளனர். கொஞ்சம் பொறுத்திருக்குமாறு கூறியுள்ளேன்.

எல்லாம் பரீட்சையால் வந்த வினைதான். பத்தாவது வகுப்பை முடித்து விட்ட நான் இப்போது பிளஸ் ஒன் படித்துக் கொண்டுள்ளேன். 7ம் தேதிபரீட்சை ஆரம்பமாகிறது. ஓரளவுக்கு ரிவிஷன் முடித்து விட்டேன். இருந்தாலும் எக்ஸாமை நினைத்தாலே ஆடிப் போய் விடுகிறது. நல்லாஎழுதணும், நல்ல மார்க் வாங்கணும், அதுதான் இப்போதைய ஒரே கவனம்.

நடிப்பு என்னதான் பணத்தைக் கொடுத்தாலும், படிப்புதானே சேட்டா ரொம்ப முக்கியம்? அதனால்தான் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை என்றுபடிப்பையும் தொடர்ந்து கொண்டிருக்கிறேன் என்றார் பல்லாங்குழி சி>ப்பழகி பானு.

படங்களில் புக் விட்டால் பரீட்சை தரிசாகி விடுமே என்ற பயத்தால்தான் புதுப் படங்களில் ஒப்பந்தமாகாமல் தள்ளிப்போட்டு வருகிறாராம் பானு.

ஒருபக்கம் நடிப்பு, மறு பக்கம் படிப்பு, இதுதான் கேரளா ஸ்டைல்!

Read more about: actress bhanu afraid of exam
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil