»   »  ஜல்சா பானு

ஜல்சா பானு

Subscribe to Oneindia Tamil

ஐயா படம் மூலம் நயனதாராவை தமிழுக்குக் கொண்டு வர டைரக்டர் ஹரி இப்போது இன்னொரு கேரளபப்ளிமாஸ் பழத்தை கோலிவுட்டுக்கு இறக்குமதி செய்கிறார்.

இவரது பெயர் முக்தா எல்சா ஜார்ஜ். பேரைப் போலவே படு ஜல்சாவாக இருக்கிறார் இந்த சேச்சி.இம்புட்டு பெரிய பேரை நம்மவர்கள் குதறியெடுத்து விடுவார்கள் என்பதால் பானு என்று மிக அடக்கமாகசுருக்கிவிட்டார் ஹரி. பானுவுக்கு சொந்த ஊர் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மலையோர ஊரானகொத்தமங்கலம்.இந்த மலை தேவதை படிப்பது 10ம் வகுப்பு தான். ஆனால், ஆளைப் பார்த்தால் அப்படித் தெரியலை. இடுக்கிமாவட்ட தேயிலை தோட்டம் மாதிரி நன்றாகவே வளர்ந்து, தளதளவென செழித்து நிற்கிறார்.8ம் வகுப்பு படிக்கும்போதே அச்சன் உறங்காத வீடு என்ற மலையாள டிவி சீரியலில் தலைகாட்டஆரம்பித்துவிட்டார் பானு. அப்படியே இன்ன பிற சீரியல்களில் தலைகாட்டிவிட்டு மலையாளத்தில் ஒருபடத்திலும் நடித்துவிட்டார்.

இதையடுத்து தெலுங்கு சினிமா மீது மோகம் கொண்டு ரயில் ஏறினார். அங்கு பார்க்க வேண்டியவர்களைபார்த்தார். இதனால் ஒரு படம் கிடைத்தது. அதைத் தொடர்ந்து சூப்பர் டூப்பர் ஆல்பங்களை தயார் செய்துமீடியேட்டர்கள் மூலம் தமிழ் சினிமாவில் ரவுண்டு விட்டார்.

அப்படியாக தமிழிலும் வாய்ப்பைப் பிடித்துவிட்டார். விஷாலை வைத்து ஹரி இயக்கும் தாமிரபரணி படத்தில்பானு தான் ஹீரோயின்.

தமிழ், சாமி, கோவில், அருள், ஐயா, ஆறு என 6 வெற்றி-தோல்விப் படங்களை மாற்றி மாற்றித் தந்த ஹரிக்குசொந்த ஊர் திருநெல்வேலி தான். இதனால் தாமிரபரணியையே தலைப்பாக வைத்து கதையை செதுக்கிவிட்டார்.

இந்த நதியின் கரையோரத்தில் வசிக்கும் ஒரு குடும்பத்தின் சோகம் கலந்த ஆக்ஷன் கதையாம்.

மேலும் பிரபுவும், நதியாவும் ஜோடி போடப் போகிறார்கள் நீண்ட காலத்துப் பிறகு. நிழல்கள் ரவி, நாசர்,ரோஹிணி, கஞ்சா கருப்பு, மீரா கிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் நடிக்கும் இந்தப் படத்துக்கு இசை யுவன் சங்கர்.

படத்தில் முக்தா எல்சா ஜார்ஜ் என்ற பானுவுக்கு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் கேரக்டராம்.

தாமிரபரணி தவிர இன்னொரு பெயரிடப்படாத ஒரு தமிழ்ப் படமும் பானுவைத் தேடி வந்துவிட்டதாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil