»   »  பர பர பாரதி!

பர பர பாரதி!

Subscribe to Oneindia Tamil

தகதகவென இருக்கும் பாரதி, பரபரவென தனது மார்க்கெட்டை ஸ்திரப்படுத்தஆரம்பித்துள்ளார்.

பாரதி பாப்பாவின் ஆட்டம் ஆரம்பித்தது விளம்பரப் படங்கள் மூலம்தான். அதில்கிடைத்த அறிமுகத்தை வைத்து லயா, ஆடாதா ஆட்டமெல்லாம் என இரு படங்களில்நடித்து விட்டார்.

இப்போது புதுமைப்பித்தன் பார்த்திபனுடன் ஜோடி போடப் போகிறார். பாரதி நடிக்கவந்து 2 ஆண்டுகள்தான் ஆகின்றன. ஆனால் அதற்குள் தெலுங்கு, கன்னடம் எனபத்து படங்களில் நடித்து விட்டாராம் (மெய்யாலுமா?)

அவரை உட்கார வைத்து கடலை போட்ட போது கிடைத்த சமாச்சாரங்கள்,

நான் நடித்த பத்துப் படங்களிலும் எனது பெயரை மட்டுமே தக்க வைத்துக்கொள்ளமுடிந்தது. நான் என்ன எதிர்பார்த்தேனோ அது இப்போது தான் கிடைக்கஆரம்பித்திருக்கிறது.

எனவே எனது நடிப்புத் திறமையை முழு வீச்சில் இறக்கிவிடப் போகிறேன்.

சினிமாவில் பல சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும். வெற்றி பெறுவது எளிதானகாரியம் அல்ல. சமாளித்து கரையேற வேண்டியது தான்.

யுகா படத்தில் நான் நன்றாகத்தான் நடித்தேன். ரொம்ப மெனக்கெட்டு பல காட்சிகளில்நடித்தேன். கொல்லி மலைக் காட்டில் இரவில் தான் ஷூட்டிங் வைத்தார்கள். பாம்பு,விலங்குகள் என பல அச்சுறுத்தல்கள்.

பாம்பைப் பார்த்து பயந்தால் ஆகுமா? அக்கறையோடு நடித்தேன். ஆனால் அந்தப்படம் ரசிகர்களை கவரவில்லை என்று அங்கலாய்த்தார் பாரதி.

சரி சினிமா, விளம்பரம் எது பெஸ்ட் என்று தொழில்ரீதியாக தாவினோம். இரண்டுமேபெஸ்ட்தான். ஆனால் சினிமாவைவிட விளம்பரத்தில்தான் காசு அதிகம். சினிமாவில்படம் அதிகமானால்தான் துட்டு சேரும்.

உங்களது கட்டழகுக்கு என்ன காரணமோ? என்று கேட்டால்,

யோகா பயில்கிறேன். கராத்தேவும் கற்று வருகிறேன். மனதை எப்போதும்சந்தோஷமாக வைத்துக் கொள்கிறேன். இதுதான் காரணம் என்றார் சின்னதாய்சிரித்தபடி.

இப்போது சறுக்கலில் இருந்தாலும் ஒரு நாளைக்கு நிச்சயமாக தேறி விடுவார் பாரதி.

எல்லாந்தேன் நல்லா இருக்கே!...

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil