'கனல்' நாயகி பாரதி
| Click here for more images |
தக்காளி சீனிவாசன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தை இயக்க வருகிறார். திரில்லர் படங்களை எடுப்பதில் பிரபலமானவர் தக்காளி சீனிவாசன். நீண்ட காலமாக இவர் படங்கள் எதையும் இயக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில் சற்று முன் கிடைத்த தகவல் மூலம் மீண்டும் இயக்க வந்துள்ளார்.
சற்று முன் கிடைத்த தகவல் குறித்து சீனிவாசன் கூறுகையில், தொடர் கொலைகள் குறித்த ஒரு திரில்லர் கதைதான் இப்படம். எனது முந்தையைப் படங்களைப் போலவே இந்தப் படமும் சஸ்பென்ஸ் கலந்த திரில்லராக இருக்கும்.
இப்படத்தில் நாயகனாக ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் நடிக்கவுள்ளார். முதல் முறையாக அவர் ஹீரோவாக அறிமுகமாகிறார். படத்தில் சண்டைக் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறோம்.
பாரதி, இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். அவரது முழுத் திறமையும் இப்படத்தின் மூலம் வெளிப்படும் என்றார்.
சீனிவாசனின் பெயரிலேயே 'தக்காளி' இருப்பதால் படம் முழுக்க 'ரத்தச் சிவப்பாக' இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை!


Click it and Unblock the Notifications











