பாரதியின் கலக்கல்
பாரதி!
ஒரு நல்ல தமிழப் பெயரில் கர்நாடகத்தில் இருந்து இறக்குமதி ஆகியிருக்கிறார் இந்த கலக்கல் நாயகி.
நடித்து வரும் படத்தின் பெயரும் கலக்கல் தான். தமிழச்சியான இவரது குடும்பம் நீண்ட காலத்துக்கு முன்பேகர்நாடகத்தில் செட்டில் ஆகிவிட்ட ஒன்றாம்.
பெங்களூரில் சின்ன சின்னதாய் மாடலிங் செய்து கொண்டிருந்தவருக்கு அந்த ஊர் டிவி சீரியல்களில் நடிக்கவும்மும்பையில் மாடலிங் பண்ணவும் வாய்ப்புக்கள் வர, அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு சென்னையில் வந்து வாய்ப்புவேட்டையாடி வென்றிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் நடிக்க ஹீரோயினுக்கு என்ன தேவையோ அதெல்லாம் என்கிட்ட நிறையவே இருக்கு என்கிறார்பாரதி. தமிழ் சினிமா தானே இன்னைக்கு இந்தியாவிலேயே பெஸ்ட் ஸ்டோரி லைன்களோட கலக்கிட்டு இருக்கு.அழகான ஹீரோஸ்.. ஆர்வமான ஆடியன்ஸ்.. கண்கள் விரிய பேசுகிறார் பாரதி.
இவரைப் போலவே அவர் பேசும் தமிழும் கொள்ளை அழகு.
அறிமுகமான முதல் படமான கலக்கலிலேயே இவர் கலக்கி வருவதை அவரது ஸ்டில்களைப் பார்த்தே உணர்ந்துகொண்ட கோகுல் மீடியாஸ் என்ற புதிய நிறுவனம் இவரைத் தேடி வந்து தனது படத்தில் புக் செய்துவிட்டது.
அந்தப் படத்தின் பெயர் வில். நீண்ட நாட்களாக பிரேக்குக்காக ஏங்கி வரும் விக்ஷேன் தான் ஹீரோ. இசைஇளையராஜா.
எஸ்.எல்.வளையாபதி இயக்கப் போகும் இந்தப் படத்தில் பாரதியைத் தவிர மேலும் இரு மும்பை வரவுகளும்ஹீரோயின்களாக அறிமுகமாகப் போகிறார்களாம்.
அதைப் பற்றிக் கேட்டால், யார் வந்தாலும் சரி. ஒரு கை பார்ப்பேன் என்று மார்தட்டுகிறார் பாரதி. புடவையில்நடிக்கனுமா, புடவையை தூரப் போட்டுவிட்டு நடிக்கனுமா.. நான் ரெடி என்கிறார்.
டான்சும் கற்று வைத்திருக்கும் பாரதி எதுக்கும் ரெடி.. நீங்க ரெடியா?


Click it and Unblock the Notifications











