பாரதி ஆடாத ஆட்டம்..
அழகான பாரதிக்கு வயசுப் பசங்கதான் முதல் படம். முதல் படத்திலேயே முத்திரைபதித்த பாரதிக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வரவில்லை. இதனால் தெலுங்குக்குத்தாவினார். அங்கு கிளாமருக்காக மட்டும் பாரதியை சேர்த்துக் கொண்டார்கள்.
சின்ன இடைவெளிக்குப் பிறகு கன்னடத்தில் ஒரு படத்தில் நடித்துவிட்டு இப்போதுமறுபடியும் தமிழுக்கு வந்துள்ளார்.
இதில் பேய்களே பயந்து போகும் அளவுக்கு கிளாமரில் கிண்டி எடுத்தார் பாரதி.
பிறகு பார்த்திபனுடன் புதிய படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால் படம்தான் எடுக்கப்படவில்லை. இப்போது லயா என்ற படத்தில் நடித்துள்ளார் பாரதி.இப்படத்தில் இரண்டு விதமான கேரக்டரில் நடித்துள்ளாராம் பாரதி.
இதைத் தொடர்ந்து பாரதி நடிக்கும் படம்தான் ஆடாதா ஆட்டமெல்லாம். துள்ளுவதோஇளமை டைப்பில் எடுக்கப்படும் இப்படத்தை இயக்குபவர் அழகர்.
இவர் செல்வராகவனின் கூத்து பட்டறையிலிருந்து வந்தவர். எனவேதான் முதல்படத்தையும் செல்வா டைப்பில் விவகாரமாக எடுத்து வருகிறார்.
ஹீரோவாக நடிப்பவர் ரவி கணேஷ், அவருடன் பாரதி போட்டுள்ள ஆட்டம், பாட்டம்,கொண்டாட்டமாக இருக்கிறதாம்..
என்னவோ பண்ணுங்க போங்க ..!


Click it and Unblock the Notifications