»   »  ட்யூஷனில் பாவனா !

ட்யூஷனில் பாவனா !

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழில் பிசியாக உள்ள பாவனாவுக்கு இப்போது தெலுங்கிலும் திக்குமுக்காட வக்ைகும் அளவுக்கு வாய்ப்பு வருகிறதாம். இதனால் வாத்தியார்வைத்து தெலுங்கு கற்க ஆரம்பித்திருக்கிறார்.

மலையாள மந்தாரை பாவனாவுக்கு தமிழ்தான் இப்போது மறு வீடாக மாறியிருக்கிறது. கை நிறையப் படங்களில் நடித்து வரும் பாவனா, சைடில்,மலையாளத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

தமிழில் அவர் நடித்துள்ள கூடல் நகர், ஆர்யா, தீபாவளி ஆகிய படங்கள் முடிந்து விட்டன. மேலும் இரு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.இந் நிலையில் தெலுங்கிலிருந்தும் சில வாய்ப்புகள் வந்துள்ளதாம்.

டப்பு ஜாஸ்தி என்பதால் தெலுங்கிலும் புகுந்து விளையாட ரெடியாகி விட்டார். ஆனால் முழு கவர்ச்சிக்கு மட்டும் ஸாரி சொல்லி விட்ட பாவனா,லேசு பாசாக வேண்டுமானால் காட்டத் தயார் என்றும் சொல்லி வைத்திருக்கிறாராம் (இல்லாவிட்டால் வேணாம் என்று கூறி விடுவார்கள்)

தெலுங்கில் நடிக்கச் செல்வதற்கு முன் தெலுங்கை நன்றாக கற்றுக் கொண்டு சொந்தக் குரலில் பேசவும் திட்டமிட்டுள்ள பாவனா, இதற்காக ஒருவாத்தியாரையும் அமர்த்தி அவரிடம் எப்படிலு, பேசுவதுலு என்று கற்றுக் கொண்டிருக்கிறாராம்.

தமிழ், மலையாளப் படப்பிடிப்புகளின்போது கிடைக்கும் கேப்பில் தெலுங்கில் பேசி, சரியா பேசுகிறோமா என்று ஒத்திகை பார்த்துக் கொள்கிறாராம்

செய்யண்டி, செய்யண்டி!

Read more about: actress bhavna learns telugu

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil