»   »  கெட்டுப் போன சிம்பு: பாவனா பாய்ச்சல்!

கெட்டுப் போன சிம்பு: பாவனா பாய்ச்சல்!

Subscribe to Oneindia Tamil

சிம்பு கெட்டவன் என்று பெயர் எடுத்து விட்டார். எனவே அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்று பாவனா பரபரப்பாக கூறியுள்ளார்.

கை நிறையப் படங்களுடன் முதலிடத்தை நோக்கி படு வேகமாகப் போய்க் கொண்டிருப்பவர் பாவனா. மாதவனுடன் ஆர்யா, பரத்துடன் கூடல்நகர் ஆகிய படங்களில் நடித்துள்ள பாவனாவை கெட்டவன் படத்தில் சிம்புவுடன் ஜோடி சேர்த்து நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தன.

ஆனால் பாவனா முடியாது என்று கூறி விட்டாராம். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் சிம்புவை வாங்கு வாங்கென்றுவாங்கியுள்ளார்.

சிம்வுடன் நான் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகின்றன. அவற்றை வெளியிடுவது சிம்புதான். ஆனால் நான் அவருடன் இணைந்து நடிக்கமுடியாது என்று கூறி விட்டேன்.

சிம்புவுக்கு இப்போது நல்ல பெயர் இல்லை. நயனதாராவுடன் சிம்பு கொடுத்த முத்தப் படங்கள் வெளியாகி அவரது பெயரை கெடுத்து விட்டன.அவருடைய இமேஜும் சரிந்து விட்டது.

ஒருவர் நல்ல பெயரை சம்பாதிப்பது எப்படி கஷ்டமோ, அதேபோல கெட்ட பெயரை சம்பாதித்து விட்டு, மீண்டும் நல்ல பெயர் எடுப்பதும்கஷ்டமானதுதான். சிம்பு கெட்டவராகி விட்டார். மீண்டும் நல்லவராவது கஷ்டமான காரியம்.

சென்னை வரும்போது வந்து பாருங்கள் என்றார் சிம்பு. ஆனால் நான் அவருடன் நடிக்கவே மாட்டேன் என்று கூறி விட்டேன். எனக்கு இருக்கும்நல்ல பெயரை கெடுத்துக் கொள்ள எனக்கு விருப்பம் இல்லை.

நல்ல பெயரைத் தக்க வைத்துக் கொள்வதில் நான் மிகவும் கவனமாக இருக்கிறேன். ஆர்யா படத்தில் கூட, உடலோடு ஒட்டியபடி உள்ள பனியனைஅணிந்து நடிக்கச் சொன்னார்கள். ஆனால் நான் முடியவே முடியாது என்று கூறி விட்டேன்.

கவர்ச்சியாக நடித்துத்தான் பிழைக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை. நல்ல கேரக்டர்களில் நடிக்கவே விரும்புகிறேன். கவர்ச்சியைக்காட்டி, உடலை வெளிக்காட்டி முதலிடத்தைப் பெறத் தேவையில்லை என்று பொறிந்து தள்ளியுள்ளார் பாவனா.

கோபிகா, நயனதாரா இருவருமே பாவனாக்கு நல்ல தோழிகள், நெருங்கிய தோழிகள் என்பது தெரியும்தானே!

Read more about: bhavana blasts simbu
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil